சூர்யா 45 மற்றும் கைதி 2 படங்கள் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

Producer SR Prabhu: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 45 படம் குறித்தும் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்தும் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.

சூர்யா 45 மற்றும் கைதி 2 படங்கள் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

சூர்யா மற்றும் கார்த்தி

Published: 

28 May 2025 15:44 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் தற்போது அவரது 45-வது படம் தற்காலிக பெயரான சூர்யா 45 என்ற பெயரில் தயாராகி வருகின்றது. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். நடிகர் சூர்யா தனது முந்தைய படமான ரெட்ரோ படத்தின் ரிலீஸிற்கு பிறகு தற்போது சூர்யா 45 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரித்து வருகிறார். இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 45 படம் குறித்தும் இயக்குநர் கார்த்தியின் நடிப்பில் தயாராக இருக்கும் கைதி 2 படம் குறித்தும் சில அப்டேட்களை தெரிவித்துள்ளார்.

சூர்யா 45 படத்தின் அப்டேட்:

எஸ்.ஆர்.பிரபு செய்தியாளர்களிடம் பேசியதாவது, சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருவாரத்தில் முடிய உள்ளது. மேலும் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் ஜூன் மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரங்களில் இருந்து வெளியாகும் என்று தெரிவித்தார்.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தொடர்ந்து பேசிய அவர், இந்தப் படம் முழுக்க முழுக்க கொண்டாட்டங்கள் நிறைந்த படம். அதனால் ஒரு பண்டிகையில் நிச்சயமாக வெளியாகும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு வருமா என்று கேட்டபோது அதற்கு அவர் சிரித்துக்கொண்டே பதிலளிக்கவில்லை.

கைதி 2 படத்தின் அப்டேட்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் முன்னதாக 2019-ம் ஆண்டு வெளியான படம் கைதி. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியிலேயே அடுத்த பாகத்திற்கான முடிச்சை இயக்குநர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலிப் படத்தை தற்போது இயக்கி உள்ளதால் அடுத்ததாக கைதி 2 படத்தை எப்போது இயக்குவார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் எஸ்.ஆர்.பிரபு அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி படத்தின் பணிகள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..