ஆர்.ஜே.பாலாஜிக்கும், கருப்பு பட தயாரிப்பாளருக்கும் பிரச்சனையா? சுருக்கமாக பதில் கொடுத்த தயாரிப்பாளர்!

Karuppu Release Update: சூர்யா நடிப்பில் கருப்பு திரைப்படமானது தயாராகியுள்ள நிலையில், இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்நிலையில் சமீப காலமாக இப்படத்தின் ரிலீஸ் எப்போது எப்போது என ரசிகர்கள் கேட்க தொடங்கிய நிலையில், இணையத்தில் ரசிகர் ஒருவர் பகிர்ந்த கருத்திற்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பதிலளித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜிக்கும், கருப்பு பட தயாரிப்பாளருக்கும் பிரச்சனையா? சுருக்கமாக பதில் கொடுத்த தயாரிப்பாளர்!

கருப்பு திரைப்படம்

Published: 

05 Mar 2026 15:51 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழில் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் 45வது திரைப்படமாக தயாராகியிருக்கும் திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji) இயக்கியிருந்த நிலையில், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா லீட் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (trisha Krishnan) நடித்துள்ளார். இந்த் படமானது தெய்வீகம், ஆக்ஷன் மற்றும் நீதி தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பிலித்திலிருந்து 1 பாடல் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளது. இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்டை கேட்டுவரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இப்படத்தின் ரிலீஸ் எப்போது என தொடர்ந்து ரசிகர்கள் போஸ்டர் அடித்தும், பார்க்கும் இடமெல்லாம் ஆர்.ஜே.பாலாஜியிடமும் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் ரசிகர் ஒருவர், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு (SR. Prabhu) இருவருக்கும் இடையே பிரச்சனை நிலவுவதாகவும், அதனால் கருப்பு படத்தின் இறுதிக்கட்ட பணியை முடிக்க வேறு இயக்குநரை தேடுவதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு எஸ்.ஜே. பிரபு காமெடியாக, எஸ்.ஜே.சூர்யாவின் பாணியில் “டே சும்மா இருடா” என்ற ஸ்டிக்கர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தலுக்கு பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட திட்டமிடும் படக்குழு – வைரலாகும் தகவல்

ரசிகரின் தவறான கருத்திற்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கொடுத்த பதில் :

கருப்பு பட ரிலீஸ் எப்போது இருக்கும்:

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படமானது ஆரம்பத்தில் மார்ச் மாதத்தில் படக்குழு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், இன்னும் அது குறித்து எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தும் கிட்டத்தட்ட 7 முதல் 8 மாதங்களான நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து சூர்யா, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: சாரா அர்ஜுன் என் மகள் மாதிரி – இயக்குநர் ஏ.எல்.விஜய் நெகிழ்ச்சி

இப்படமானது வரும் 2026 ஜூலை மாதத்தில் வெளியாகும் என படக்குழு உறுதி செய்துவிட்டது. ஆனால் இன்னும் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகவில்லை. அதன்படி வரும் 2026 ஏப்ரல் 10ம் தேதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி