ஜீ 5 ஓடிடியில் இந்த பிரின்ஸ் அண்ட் பேமிலி படத்தை மிஸ் பண்ணாதீங்க
Prince and Family Movie OTT Update : மலையாள சினிமாவில் காமெடி ட்ராமா பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் பிரின்ஸ் அண்ட் பேமிலி. இந்தப் படம் தற்போது எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் பொதுவாகவே வெளியாகும் அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர்கள் எடுக்கும் படங்கள் அனைத்தும் சமூகத்தில் இயல்பாக நடக்கூடிய விசயங்களை மையமாக வைத்து அதிக அளவில் படங்களை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவே மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பிரின்ஸ் அண்ட் பேமிலி. காமெடி ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பின்டோ ஸ்டீபன் இயக்கி உள்ள நிலையில் ஷாரிஸ் முகமது என்பவர் இந்தப் படத்திற்கு திரைக்கதையை எழுதியுள்ளார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் திலீப் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ராணியா ராணா, சித்திக், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை, தியான் ஸ்ரீனிவாசன், ஜோசுக்குட்டி ஜேக்கப், அஸ்வின் ஜோஸ், பார்வதி ஆர் சங்கரடி, ரோஸ்பெத், விஜய் ஜேக்கப், ஊர்வசி, மீனாட்சி மாதவி, வினீத் தட்டில் டேவிட், லேதா தாஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சனல் தேவ் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… நடிகர் நானிக்கு கதை சொன்ன இயக்குநர் பிரேம் குமார்? வைரலாகும் தகவல்
பிரின்ஸ் அண்ட் பேமிலி படத்தின் கதை என்ன?
மூத்த மகனாக இருக்கும் திலீப் அவரது இரண்டாவது தம்பிக்கு முதலில் திருமணம் ஆகி குழந்தையும் பிறந்துவிடுகிறது. அதனைத் தொடர்ந்து முதல் தம்பிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டில் அனைத்து பொருப்புகளையும் கவனிக்கும் திலீப்பிற்கு வயது அதிகம் ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கிறது. இந்த நிலையில் மேட்ரிமானியில் இன்ஃபுலன்சரான ராணியா ராணாவை திருமணம் செய்துகொள்கிறார். 24 வயதே உடைய இவர் வீட்டிற்கு வந்து அனைத்து விசயங்களையும் வீடியோவாக வெளியிடுகிறார்.
இப்படி இருக்கும் சூழலில் கணவன் மற்றும் மனைவி இடையே பெரிய விரிசல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த பிரச்னை எப்படி முடிந்தது அவர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… அஜித்தின் எளிமை மற்றும் பணிவைப் பார்த்து வியந்தேன் – அனுபமா



