என்னது மீண்டும் மீண்டுமா? தள்ளிப்போகும் ‘லவ் இன்சுரன்ஸ் கம்பெனி’ பட ரிலீஸ் தேதி.. இதுதான் காரணமா?
LIK Movie Delay: தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வளர்ந்த்துவரும் நாயகனாக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் வரும் 2025 டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்ட படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே 2 முறை தள்ளிப்போன நிலையில், மீண்டும் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம்
தமிழ் சினிமாவில் ரவி மோகனின் (ravi Mohan) கோமாளி (Comali) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவர் இந்த படத்திலே கேமியோ வேடத்திலும் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவரின் இயக்கத்தில், அவரே ஹீரோவாக லவ் டுடே என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுக்க, இதைத் தொடர்ந்து நடிகராக ஒப்பந்தமான 2வது திரைப்படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த திரைப்படத்தை தமிழ் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh ShivaN) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அறிவியல் புனைகதைகள் மற்றும் காதல் சார்ந்த கதைக்களம் கொண்ட திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளார்.
இந்த படமானது இவருக்கு தமிழ் அறிமுக படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலிஸ் தேதி 2 முறை மாற்றப்பட்ட நிலையில், 2025 டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தற்போது புதிய ரிலீஸ் தேதியும் மாற்றப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே நயன்தாரா.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ஹாய்’ படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்த பதிவு :
— Seven Screen Studio (@7screenstudio) October 6, 2025
மீண்டும் மீண்டும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக என்ன காரணம் :
பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 2வது உருவாகும் படமாக இந்த படம் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படம் கடந்த 2025 செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகும் என படக்குழு முதலில் அறிவித்த நிலையில், படத்தின் எடிட்டிங் வேலைகள் நிறைவடையாத காரணத்தினாலே ஒத்திவைக்கப்பட்டிருந்தது. பின் கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்திருந்தது. இதே தேதியில்தான் டியூட் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்த 2 படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் நன்றாக இருக்காது என்ற நிலையியலும், வசூல் பாதிக்கும் என்ற காரணத்தினாலும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை விற்கப்படாமல் இருக்கும் காரணத்தால், படத்தின் ரிலீஸிற்கு தாமதமாக்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.