Dude Movie: வசூல் வேட்டையில் டியூட்.. 5 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா?
Dude Movie 5-Day Collection: இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் டியூட். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருந்த நிலையில், மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியான நிலையில், 5 நாட்களில் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.

பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம்
தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (keerthiswaran) இயக்கத்திலும் வெளியான படம்தான் டியூட் (Dude). இந்த திரைப்படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடித்திருக்கிறார். இது அவரின் 4வது படமாகும். இதற்கு முன் நடித்திருந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) படமானது இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டியூட் படமானது 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியானது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது 2கே கிட்ஸ் காதல் கதைக்களத்தில் அதிரடி காமெடி காட்சிகளுடன் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
இந்த படமானது வெளியாகி இன்று 2025 அக்டோபர் 22ம் தேதியுடன் 5 நாட்களை கடந்த நிலையில், உலகளாவிய கலெக்ஷனில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இப்படமானது 5 நாட்களில் கிட்டத்தட்ட ரூ 95 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்னும் ரூ100 கோடியை நெருங்குவதற்கு வெறும் ரூ 5 கோடிகள் மட்டும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனுஷ் வழியில் பிரதீப் ரங்கநாதன்.. என்ன விஷயம் தெரியுமா?
டியூட் படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
DUDE continues the festivities at the box office 💥💥✨#DUDE grosses over 95 CRORES in 5 days worldwide ❤🔥
Book your tickets now and celebrate #DudeDiwali 🔥
🎟️ https://t.co/JVDrRd4PZQ⭐ing ‘The Sensational’ @pradeeponelife
🎬 Written and… pic.twitter.com/Jo9f1ukrW8— Mythri Movie Makers (@MythriOfficial) October 22, 2025
டியூட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்த டியூட் திரைப்படத்தில் இதுவரை பிரதீப் ரங்கநாதன் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அறிமுகமான முதல் படமாக இந்த டியூட் படம் அமைந்திருந்தது. இந்த படமானது மாறுபட்ட காதல் கதையில் வெளியாகி வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: சூப்பர் மாரி சூப்பர்’… பைசன் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமானது பெற்றுள்ளது. பொதுவாக படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களில் ஓடிடியில் வெளியாவது வழக்கம். அதன்படி இந்த டியூட் படமானது வரும் 2025 நவம்பர் 2வது வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.