Pradeep Ranganathan : LIK VS Dude.. தீபாவளிக்கு வெளியாகும் படம் – பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்த விஷயம்!

Pradeep Ranganathan About Dude And LIK Movies : சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களை ஒருவர்தான் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் டியூட் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என இரு படங்கள் தயாராகியுள்ளன. இந்த 2 படங்களின் ரிலீஸ் குறித்து பிரதீப் ரங்ககநாதன் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Pradeep Ranganathan : LIK VS Dude.. தீபாவளிக்கு வெளியாகும் படம்  - பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்த விஷயம்!

டியூட் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படங்கள்

Published: 

30 Aug 2025 18:07 PM

கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்து பின், கதாநாயகனாக பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் டிராகன் (Dragon). இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) மற்றும் டியூட் (Dude) என இரு படங்ககள் உருவாகிவந்தது. இதில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்க, பிரதீப் ரங்கநாதனுடன் கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, அக்டோபர் 17 ஆம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் டியூட் படமும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இரு படங்களின் ரிலீஸ் குறித்து பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :  ஆக்ஷன் நாயகியாக அனுஷ்கா.. ‘காதி’ படத்தின் சென்சார் அப்டேட்!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் டியூட் ரிலீஸ் குறித்து பிரதீப் ரங்கநாதன் பேச்சு

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது பேசிய அவர், ” டியூட் மற்றும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என இந்த இரு திரைபடங்களில் ஏதாவது ஒன்றுதான் 2025 தீபாவளிக்கு வெளியாகும். அது எந்த திரைப்படம் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த தீபாவளி நம்ம தீபாவளிதான்” என நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியுள்ளார். தற்போது இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி பதிவு

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்ககநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்திருக்கும் படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக வந்துள்ளதாம்.

இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, சீமான் மற்றும் கௌரி ஜி கிஷன் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த் படமானது வரும் 2025, அக்டோபர் 17 ஆம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இனிமேல் அப்படி நடிக்கமாட்டேன்.. நடிகர் விஷால் சொன்ன விஷயம்!

டியூட் திரைப்படம் :

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் டியூட். இதில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க, அவருடன் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் டியூட் பட முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படமும் இந்த 2025 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், டியூட் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.