எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக வேலை கேட்டு சென்றேன் – பிரதீப் ரங்கநாதன்

Director and Actor Pradeep Ranganadhan talks about SJ Suriya : சென்னையில் இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரிவியூ ஷோ நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக வேலை கேட்டு சென்றேன் - பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் - எஸ்.ஜே.சூர்யா

Published: 

07 Apr 2026 20:55 PM

 IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம்வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது தொடர்ந்து நாயகனாக கலக்கி வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தினை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி உள்ளார். படத்தின் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி இருந்த நிலையில் தொடர்ந்து படத்தின் பணிகள் காரணமாகவும் வெவ்வேறு காரணங்கள் காரணமாகவும் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வருகின்ற 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடிகர்கள் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் சீமான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் பிரிவியூ ஷோ இன்று நடைப்பெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். அதில் பிரதீப் ரங்கநாதன் எஸ்.ஜே.சூர்யா குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக வேலை கேட்டு சென்றேன்:

உண்மையில், இசை என்ற திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் உதவியாளராகச் சேர்வதற்காகவே நான் சென்றிருந்தேன். ஆனால், அதற்குத் தேவையான போதிய தகுதிகள் என்னிடம் இல்லாததால், அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் எனக்கு மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். அவற்றை நான் என் வாழ்க்கையில் கடைப்பிடித்தேன். அதன் பிறகு, நான் அவரிடம் ஒரு கதை ஒன்றையும் விவரித்துக் கூறினேன். அவர் அந்தப் படத்தை இயக்கவில்லை என்றாலும், அது குறித்தும் எனக்கு ஆலோசனைகளை வழங்கினார். அந்த ஆலோசனைகளை நான் எனது முதல் திரைப்படத்தில் பயன்படுத்திக்கொண்டேன். அவர் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர்களில் முதன்மையானவர். அவருடன் இணைந்து நடிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஒருமுறை, 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்பட வேண்டிய மிகக் கடினமான ஒரு காட்சி எனக்கு அமைந்தது; அதை எப்படி மிக எளிமையாக, ஒரு குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பது போல அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார் என்று பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Also Read… Vishal: பிரசாந்தை பார்த்து பொறாமை.. அவரின் படங்களை வியந்து பார்த்திருக்கிறேன் – விஷால் பேச்சு!

இணையத்தில் வைரலாகும் பிரதீப் ரங்கநாதன் பேச்சு:

Also Read… விஷ்ணு விஷால் – மமிதா பைஜுவின் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?