என்னவளே அடி என்னவளே… 31 ஆண்டுகளை நிறைவு செய்த காதலன் படம்

Kadhalan Movie: பான் இந்திய அளவில் பிரபல நடன இயக்குநராக தற்போது வலம் வருபவர் நடன இயக்குநர் பிரபு தேவா. இவர் முன்னதாக பலப் படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான காதலன் படம் தற்போது 31 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

என்னவளே அடி என்னவளே... 31 ஆண்டுகளை நிறைவு செய்த காதலன் படம்

காதலன் படம்

Published: 

17 Sep 2025 17:34 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக இருப்பவர் இயக்குநர் சங்கர் (Director Sankar). இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் முன்னதாக வெளியான படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேறபைப் பெற்றது குறிப்பிடத்தகக்து.  அந்த வகையில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கடந்த 17-ம் தேதி செப்டம்பர் மாதம் 1994-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் காதலன். இந்தப் படத்தில் நடிகர் பிரபு தேவா (Actor Prabhu Deva) நாயகனாக நடித்து இருந்தார். நாயகியாக நடிகை நக்மா நடித்து இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வடிவேலு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுவரன், மனோரமா, கிரீஷ் கர்னாட், அல்லு ராமலிங்கையா, அஜய் ரத்னம், கவிதா, பத்மப்ரியா, கவிதாஸ்ரீ, தாமு, ரனீஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ. ஆர். எஸ். பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன் தயாரித்து இருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

காதலன் படத்தின் கதை என்ன?

தமிழ் நாட்டின் கவர்னராக இருக்கும் கிரீஷ் கர்னாட் மகளை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் பிரபு தேவா காதலிக்கிறார். இவர்களின் காதலுக்கு கிரீஷ் கர்னாட் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எப்படி இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள் என்பதே படத்தின் கதை. ரொமாண்டிக் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… அனிகா சுரேந்திரனின் செலிபிரிட்டி க்ரஸ் யார் தெரியுமா? அவரே சொன்ன விசயம்!

நடிகர் பிரபு தேவாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… சார்பட்டா படத்தில் டான்ஸிங் ரோஸ் கேரக்டர் குறித்து நெகிழ்ந்து பேசிய ஷபீர்!