Dhanush : தனுஷிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! என்ன படம் தெரியுமா?
Dhanush New Film Update : நடிகர் தனுஷ் பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குபேரா. இப்படத்தைத் தொடர்ந்து பிரபல தமிழ் இயக்குநரின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் பட நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது யார் என்பதைப் பற்றி விவரமாக பார்க்கலாம்.

நடிகர் தனுஷ் (Dhanush) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (Nilavuku en mel ennadi kobam) . புதுமுக நடிகர்களை வைத்து தனுஷ் இயக்கிய இப்படமானது, கடந்த 2025ம் பிப்ரவரி மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் இட்லி கடை (Idly Kadai) என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துவந்தார். இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டு வெளியான முதல் படம் குபேரா (Kuberaa). தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிச்சைக்காரனாக தனுஷ் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழிகளில் வெளியான இப்படமானது சுமார் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishq Mein) என்ற படத்தில் நடித்துவந்த நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்தது.
இந்நிலையில், இதைத் தொடர்ந்து தனது கைவசத்தில் கிட்டத்தட்ட 5 படங்களை வைத்திருக்கிறார். அதில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் இணையவிருக்கும் படத்தில் விஜய் பட நடிகை நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அது வேறு யாருமில்லை நடிகை பூஜா ஹெக்டேதான். அவர்தான் தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.




நடிகை பூஜா ஹெக்டே போட்டோஷூட்ஸ் :
View this post on Instagram
தனுஷ் – பூஜா ஹெக்டே கூட்டணி ?
தனுஷின் 54வது திரைப்படத்தைப் போர் தொழில் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டேதான் தனுஷிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம். இந்த புதிய படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 90 நாட்கள் நடைபெற உள்ளதாம்.
அதைத் தொடர்ந்து தனுஷ் புதிய படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் இந்த 2025, ஜூலை மாதத்தின் இறுதியில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் கைவசம் இருக்கும் படங்கள் :
நடிகர் தனுஷின் நடிப்பில் மட்டும் 2 படங்கள் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலையிலிருந்து வருகிறது. இதற்கு அடுத்ததாக விக்னேஷ் ராஜாவுடன் ஒரு படமும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் டி55 படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதை அடுத்ததாக நடிகர் தனுஷ் விஜய் திரைப்பட இயக்குநரான ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படம் என அடுத்தடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இளையராஜா பயோபிக், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பயோபிக் என இரு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.