Pooja Hegde : பாலிவுட்டில் கிளாமர் ரோலுக்கு மட்டுமே என்னைத் தேர்வுசெய்கின்றனர் – பூஜா ஹெக்டே பேச்சு!
Pooja Hegde About North Indian Cinema: தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவரின் நடிப்பில் தமிழில் பல படங்ககள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், பாலிவுட்டில் கிளாமர் வேடங்களுக்குத்தான், தன்னை தேந்தெடுக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde), தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில், தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா வரை பல பிரபலங்களுடன் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). சூர்யாவின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இதில் ருக்மணி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படைத்ததை அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி (Coolie) படத்தில் மோனிகா என்ற பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் கலந்துகொண்டு பூஜா ஹெக்டே பேசியிருந்தார். அதில் அவர் வட இந்திய சினிமாவில், தன்னை கிளாமருக்காக மட்டுமே தயாரிப்பாளர்கள் அணுகுகிறார்கள்” என அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். மேலும் தென்னிந்திய சினிமா குறித்தும் பெருமையாகப் பேசியுள்ளார். அவர் பேசியது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : கூலி படத்தின் மோனிகா பாடலைப் பாராட்டிய மோனிகா பெலூசி – நெகிழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில் நடிகை பூஜா ஹெக்டேவிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, வட இந்திய சினிமா மற்றும் தென்னிந்திய சினிமா பற்றியும் பேசியிருந்தார். நடிகை பூஜா ஹெக்டே அதில் ” வட இந்திய சினிமாவில் இன்னும் பல திரைப்படங்களில், என்னை வெறும் கிளாமர் வேதங்களுக்கும் மட்டுமே தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய சினிமாவில் என்னுடைய படங்களைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன்.
மேலும் ரெட்ரோ படத்தில், எனது ருக்மிணி கதாபாத்திரத்தை யாரும் பார்க்கவில்லை என நினைக்கிறேன். அதில் கிளாமர் இல்லாமல் நான் நடித்திருந்தேன். ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்கு, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு முழு பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த நேர்காணலில் நடிகை பூஜா ஹெக்டே கூறியிருந்தார்.
இதையும் படிங்க : ஜன நாயகன் விஜயின் கடைசிப் படம் என்பது சோகத்தை ஏற்படுத்தியது – நடிகை பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டேவின் பதிவு!
View this post on Instagram
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருகிறாராம். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.