3 தேசிய விருதுகளை குவித்த பார்க்கிங் படக்குழு – வைரலாகும் போட்டோஸ்!
71st National Film Awards: கடந்த 2023-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விழா இன்று டெல்லியில் குடியரசு தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தமிழ் சினிமாவில் இருந்து பலர் விருதுகளைப் பெற்ற நிலையில் பார்க்கிங் படத்திற்கு மட்டும் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது. இதனை படக்குழு கொண்டாடி வருகின்றது.

பார்க்கிங் படக்குழு
இன்று 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அதன்படி 71 தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைப்பெற்றது. இந்தியா முழுவதும் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான பார்க்கிங் படத்திற்கு மட்டும் 3 விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த துணை நடிகருக்கான விருது, சிறந்த திரைக்கதைக்கான விருது என மூன்று விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ் சினிமா உட்பட படக்குழுவினர் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பார்க்கிங். இந்தப் படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் தான் இவர் முதன் முதலாக இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ராம ராஜேந்திரன், ப்ராதனா நாதன், விஜய் சத்யா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
பார்க்கிங் படத்தின் கதை என்ன?
எம்.எஸ்.பாஸ்கர் குடும்பத்தினருடன் வாடைகைக்கு இருக்கும் வீட்டில் மேல் பகுதிக்கு புதிதாக திருமணம் ஆன ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் இருவரும் வாடகைக்கு வருகின்றனர். இந்துஜா கர்பமாக இருப்பதால் அவரை வெளியில் அழைத்து செல்ல சிரமம் இல்லாமல் இருப்பதற்காக கார் ஒன்றை வாங்குகிறார் ஹரிஷ் கல்யாண். அதனை எம்.எஸ்.பாஸ்கர் வீட்டிற்கு வெளியே இருக்கும் பார்க்கிங்கில் நிறுத்துகிறார். இந்த பார்க்கிங் காரணமாக எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவருக்கு இடையே ஈகோ பிரச்னை ஏற்படுகிறது. இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
Also Read… ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தை செதுக்கி இருக்கார் – நடிகர் நட்டி சுப்ரமணியம்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#71stNationalAwards | #Parking
Best Tamil Film
Best Original Screenplay
Best Supporting Role pic.twitter.com/Dlw7NJQ3x4— Hifitalkies lenin (@HiFiTalkies) September 23, 2025
Also Read… ஸ்போர்ட்ஸ் ட்ராமா படம் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த கூமர் படத்தை மிஸ் செய்யாதீர்கள்