பராசக்தி ஒரு அரசியல் படம் மட்டுமல்ல – இயக்குநர் சுதா கொங்கரா
Director Sudha Kongara: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் பராசக்தி. இந்தப் படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி ஒட்டுமொத்த பான் இந்திய சினிமாவிலும் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு குறைவான எண்ணிக்கையில் தான் பெண் இயக்குநர்கள் உள்ளனர். அந்த வரிசையில் உள்ளவர்தான் இயக்குநர் சுதா கொங்கரா. இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் சுதா கொங்கரா. இவரது இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் சூரரைப் போற்று. இந்தப் படம் கொரோனா காலத்தில் வெளியானதால் அது நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையைப் படைத்து இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தினை இந்தி சினிமாவில் ரீ மேக் செய்தார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தி மொழியில் அந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் பராசக்தி. இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். படம் வருகின்ற ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திக்ருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பராசக்தி ஒரு அரசியல் படம் மட்டுமல்ல:
‘பராசக்தி’ திரைப்படம் அரசியல் போராட்டங்களின் பின்னணியில் ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன் – தம்பி உறவின் கதையைச் சொல்கிறது. இதில் தீவிரமான காதலும் உண்டு. சிவகார்த்திகேயன் ஒரு அரசு அதிகாரியாகப் பணியாற்றுகிறார், அதே சமயம் அதர்வா பொறியாளராகப் படித்துவருகிறார். இருவருக்கும் முற்றிலும் மாறுபட்ட சித்தாந்தங்கள் உள்ளன, இது கருத்து மோதல்களுக்கு வழிவகுக்கிறது. இதற்கிடையில், எதிர்ப்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் ஒரு அமைச்சரின் மகளுடன் ஒரு காதல் கதையும் இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவோ அல்லது ஒரே மாதிரி சிந்திக்கவோ முடியாது.
சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளால் இந்த மூன்று பேரின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது என்பதை இந்தத் திரைப்படம் ஆராய்கிறது. அவர்களின் உறவுகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. நம் வீடு, நம் குடும்பம் என்று மட்டும் சிந்தித்து சமூகத்தில் வாழ முடியாது; பெரிய சமூக சக்திகள் நம் அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன என்பதையும் இது உணர்த்துகிறது. தமிழகத்தையே உலுக்கும் ஒரு போராட்டத்தைச் சுற்றி இந்தக் கதை பின்னப்பட்டுள்ளது என்று சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
Also Read… பிக்பாஸில் சாண்ட்ராவின் செயலால் கடுப்பாகும் ஒட்டுமொத்த போட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
The movie #Parasakthi is set against a backdrop of political struggle 🎭 and tells the story of a brother-sister relationship in a family 👨👩👧. There’s also intense romance 💖.#Sivakarthikeyan works as a government officer 🏢, while #Atharvaa is studying to become an engineer 🎓.… pic.twitter.com/CU8Mo7s6l3
— Movie Tamil (@_MovieTamil) December 18, 2025
Also Read… பராசக்தி படத்தினை தியேட்டர் ரிலீஸிற்கு பிறகு எந்த ஓடிடியில் பார்க்கலாம்? வைரலாகும் தகவல்