இப்படித்தான் நீங்கள் வலியை கலையாக மாற்றுகிறீர்கள் – பைசன் படத்தைப் பாராட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்!
Nivetha Pethuraj: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படங்களில் நடித்து வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவரது நடிப்பில் சமீபத்தில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை என்றாலும் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் ரசிகர்களிடையே இணைந்து இருக்கிறார்.

நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஒரு நாள் கூத்து. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை நிவேதா பெத்துராஜ் (Actress Nivetha Pethuraj). இந்தப் படத்தில் நடிகர் அட்டக்கத்தி தினேஷிற்கு ஜோடியாக நடித்த இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்தப் படத்தில் தினேஷ் மற்றும் நிவேதா பெத்துராஜின் அடியே அழகே பாடல் தற்போது வரை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. குறிப்பாக காதலில் ஏற்பட்ட ஊடலால் பிரிந்து வாழ்பவர்களுக்கு இந்தப் பாடல் ஆந்தமாக இருக்கிறது என்பதே உண்மை. இந்த ஒரு நாள் கூத்து படத்தைத் தொடர்ந்து நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் நடித்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இறுதியாக நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படம் பூ. இது தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியானது. இதில் நடிகை நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கவில்லை என்றாலும் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் பார்ட்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு எழுதி இயக்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தும் சில காரணங்களால் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது.
பைசன் படத்தைப் பாராட்டிய நடிகை நிவேதா பெத்துராஜ்:
இந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் பைசன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் தொடர்ந்து பாரட்டி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பைசன் படம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, பைசன் என்னை உலுக்கியது.. தீவிரமான, உணர்ச்சிவசப்பட்ட, மற்றும் அடுக்குகளாக. விளையாட்டு மற்றும் சமூக வரலாற்றின் ஒரு தீவிர கலவை, முன்பு உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய உங்களை ஏங்க வைக்கிறது. இப்படித்தான் நீங்கள் வலியை கலையாக மாற்றுகிறீர்கள் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
Also Read… கபாலி படத்தில் ரஜினிகாந்தை எப்படி அந்த வசனம் பேச வைக்கலாம்னு விமர்சனம் சொன்னாங்க – பா.ரஞ்சித்
நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Bison left me shaken.. Intense, emotional, and layered. A haunting mix of sport and social history that makes you crave to know what really happened before.
And this is how you turn pain into art 👏🏼
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) October 26, 2025
Also Read… இணையத்தில் கவனம் பெறும் பைசன் காளமாடன் படத்தின் மேக்கிங் வீடியோ