எங்க வீட்ல எல்லாம் அதபத்தி பேசவே மாட்டாங்க – நடிகை நித்யா மேனன் சொன்ன விசயம்!
Actress Nithya Menon: தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சாதி மதம் குறித்து தனது குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்து என்ன என்பதை வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகை நித்யா மேனன்
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1998-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஆகி பின்பு நாயகியாக மாறியவர் நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon). இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் நடித்து வருகிறார். ஆனால் தென்னிந்திய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருகிறார் நடிகை நித்யா மேனன். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சாதி குறித்தும் மதம் குறித்தும் நடிகை நித்யா மேனன் வெளிப்படையாக பேசியுள்ளார். அந்தப் பேட்டியில் நடிகை நித்யா மேனன் கூறியதாவது ”இதுவரை எனது குடும்பத்தில் உள்ள யாரும் சாதி மற்றும் மதம் குறித்து வீட்டில் பேசியது இல்லை.
நான் சினிமாவில் நடிக்க வந்த பிறகு தான் எனது பெயருக்கு பின்னால் இந்த மேனன் இணைக்கப்பட்டது. எனது குடும்பத்தில் உள்ள யாரும் சாதியின் அடிப்படையிலோ அல்லது மதம் அடிப்படையிலோ எதையும் பேச மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் நான் இந்த சாதியின் அடையாளத்தை எனது பெயருடன் வைத்துள்ளது சிலரை காயப்படுத்தலாம்.
ஆமா சாதி அடிப்படையில் பார்த்தால் நான் இந்த மேனன் சாதியில் பிறந்தவர் தான். ஆனால் எங்களது குடும்பத்தில் சாதியோ அல்லது மதத்தையோ பின்பற்றும் பழக்கம் இல்லை என்று நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை நித்யா மேனன் வெளியிட்ட இன்ஸ்டா போஸ்ட்:
Also Read… இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!
நடிகை நித்யா மேனன் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் தலைவன் தலைவி:
நடிகை நித்யா மேனன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து அவர் தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவன் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த தலைவன் தலைவி படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.