Thalaivan Thalaivii: ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி அட்ராசிட்டி.. போட்டுடைத்த நித்யா மேனன்!

Thalaivan Thalavii Movie Shooting Atrocity : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படமானது ரிலீசிற்கு காத்திருக்கும் நிலையில், அப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நித்யா மேனன், விஜய் சேதுபதியின் அட்ராசிட்டி குறித்துப் பேசியுள்ளார்.

Thalaivan Thalaivii:  ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி அட்ராசிட்டி.. போட்டுடைத்த நித்யா மேனன்!

நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதி

Published: 

21 Jul 2025 10:41 AM

இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் நித்யா மேனன் (Nithya Menon) இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், அதை அடுத்ததாகக் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருந்தது. அதை தொடர்ந்து இந்த படமானது வரும் 2025 ஜூலை 25ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், அந்த நேர்காணலில் நடிகை நித்யா மேனன் ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி செய்த அட்ராசிட்டி குறித்து பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி ஷூட்டிங் ஸ்பாட்டில் நிஜ பரோட்டா மாஸ்டராக (Parotta Master) மாறிய தருணம் பற்றி கூறியுள்ளார். அந்த நேர்காணலில் நடிகர் விஜய் சேதுபதி, பாண்டிராஜ், மற்றும் நித்யா மேனன் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஹரிஸ் கல்யாண் எடுத்த ரிஸ்க் .. ஸ்டண்ட் மாஸ்டர் சொன்ன விஷயம்!

நடிகை நித்யா மேனன் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய நடிகை நித்யா மேனன், அதில் ” தலைவன் தலைவி ஷூட்டிங் ஸ்பாட்டில் நிஜ பரோட்டா மாஸ்டராகவே மாறிவிட்டார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்களுக்கு வித்தியாச வித்தியாசமான பரோட்டாவைச் செய்து தருவார். அவர் சாக்லேட் புரோட்டா, பொங்கல் கொத்து பரோட்டா மற்றும் விதவிதமான பரோட்டா வகைகளைச் செய்து தருவார். அதைப்போல டைட்டில் டீசரில், ஒரு காட்சி வருமே, அந்த காட்சியை நாங்கள் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு எடுத்தோம். அந்த பரோட்டாவை ஆரம்பத்தில் கொத்து பரோட்டாவாகத்தான் செய்ய நினைத்தோம். அந்த காட்சியின் ஷூட்டிங் டைம் நீண்டுகொண்டு போன நிலையில், அந்த பரோட்டா பொங்கலாக மாறிவிட்டது என அவர் நகைச்சுவையாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க : ரஜினிகாந்தின் கூலி ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. குஷியில் ரசிகர்கள்!

தலைவன் தலைவி ட்ரெய்லர் மில்லியன் பார்வை பதிவு :

தலைவன் தலைவி திரைப்படமானது முற்றிலும் குடும்ப கதைக்களம் கொண்ட , விவாகரத்து தொடர்பான கதைக்களத்தில் உருவாகியிருப்பதாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், இதுவரை 5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்படமானது வரும் 2025 ஜூலை 25ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.