சாம்ராஜியம், சிம்மாசனம் எல்லாம் இருக்கு ஆனா, அந்த க்ரீடாத அணிய தகுதி யாருக்கு இருக்கு? – இணையத்தில் வைரலாகும் லெகசி தொடரின் டீசர்

Legacy Web Series Teaser: தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தாலும் ஓடிடி கலாச்சாரத்திற்கு பிறகு இணையதள தொடர்களின் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தற்போது லெகசி என்ற தொடரின் டீசரை வெளியிட்டுள்ளது

சாம்ராஜியம், சிம்மாசனம் எல்லாம் இருக்கு ஆனா, அந்த க்ரீடாத அணிய தகுதி யாருக்கு இருக்கு? - இணையத்தில் வைரலாகும் லெகசி தொடரின் டீசர்

லெகசி

Published: 

04 Feb 2026 10:45 AM

 IST

இந்திய சினிமாவைப் பொருத்தவரை தொடர்ந்து வாரம் வாரம் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் வெளியாகி சில நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் ஓடிடியில் நேரடியாகவும் படங்கள் வெளியாகி வருகின்றது. தொடர்ந்து படங்கள் மட்டும் இன்றி ஓடிடி தளங்களில் இணையதள தொடர்களும் ஒளிபரப்பாகி வருகின்றது. மக்களிடையே தொலைக்காட்சியில் சீரியல் பார்க்கும் பழக்கம் இருக்கும் நிலையில் ஓடிடியிலும் இணையதள தொடர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் தொலைக்காட்சியைப் பொருத்தவரை அந்த மொழி மக்கள் அவர்களின் மொழி சீரியல்கள் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் ஓடிடியின் பயன்பாடு வந்தபிறகு மற்ற மொழி தொடர்களையும் மக்கள் பார்க்கும் பழக்கமும் தற்போது அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இந்திய மொழிகளில் வெளியாகும் இணையதள தொடர்கள் மட்டும் இன்றி உலக அளவில் எந்த மொழியில் உருவான தொடர்களாக இருந்தாலும் அதனை மக்கள் அனைவரும் பார்த்து கொண்டாடி வருகின்றனர். மேலும் ஓடிடி நிறுவனங்கள் நேரடியாக தயாரித்து பல இணையதள தொடர்களையும் தற்போது வெளியிட்டு வருகின்றனர். மேலும் பான் இந்திய மொழிகளில் எந்த மொழியில் அந்த தொடர் உருவானாலும் மற்ற மொழிகளில் டப் செய்தும் வெளியிடப்படுகின்றது.

இணையத்தில் வைரலாகும் லெகசி இணையதள தொடரின் டீசர்:

இந்த நிலையில் பொலிட்டிகள் ட்ராமா பாணியில் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் தயாரித்துள்ள இணையதள தொடர் லெகசி. இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த தொடரில் நடிகர்கள் ஆர். மாதவன், நிமிஷா சஜயன், குல்ஷன் தேவையா, அபிஷேக் பானர்ஜி, கௌதம் ராம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த தொடரை இயக்குநர் சாருகேஷ் சேகர் எழுதி இயக்கி உள்ள நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இந்த நிலையில் இந்த லெகசி இணையதள தொடரின் டீசரை வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஏ அழகிய தீயே… ரீ ரிலீஸாகிறது 25 ஆண்டுகளை நிறைவு செய்த மின்னலே படம்

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யா 47 படப்பிடிப்பில் என்ன பிரச்சனை… வைரலாகும் தகவல்

Follow Us
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு
அதிகரிக்கும் போர் பதற்றம்.. 5 நாள் கெடு கொடுத்த அதிபர் டிரம்ப்..
"முன்பே வா" ரெய்னாவிற்கு மட்டுமல்ல.. தோனிக்கும் ரொம்ப பிடிக்கும்!.. ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த சுவாரசியம்!
ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் - துரந்தர் 2 படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்