சிம்பு – வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறீர்களா? நகைச்சுவையாக பதிலளித்த நெல்சன் திலீப்குமார்!

Nelson Dilipkumar : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை இயக்கிவருகிறார். மேலும் சமீபத்தில் சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணி படத்தில் இவரும் இணைந்திருக்கும் நிலையில், அதில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறீர்களா? நகைச்சுவையாக பதிலளித்த நெல்சன் திலீப்குமார்!

சிலம்பரசன் மற்றும் நெல்சன் திலீப்குமார்

Published: 

02 Sep 2025 22:34 PM

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை பிரபல நடிகர்களை வைத்து படத்தை இயக்கியிருப்பவர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar). இவரின் இயக்கத்தில் குறைவான படங்ககள் வெளியாகியிருந்தாலும் ஒவ்வொன்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் 2 (Jailer 2) திரைப்படமானது உருவாகிவருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடித்துவரும் நிலையில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு (Yogi Babu) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், நெல்சன் திலீப்குமார் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் நெல்சனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சிலம்பரசன் (Silambarasan) மற்றும் வெற்றிமாறன் (Vetrimaaran) கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கிறீர்களா ? என கேள்விகள் கேட்ப்பட்டது. அதற்கு நெல்சன் நகைச்சுவையாக பதில் பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க :  இந்தியாவில் இதை ஊக்குவிப்பது முக்கியம்.. மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து அஜித் குமார் பேச்சு!

சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி படம் குறித்து நெல்சன் திலீப்குமார் பேச்சு

அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நெல்சனிடம், நீங்கள் சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கிறீர்களா ? என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நெல்சன் திலீப்குமார் தொகுப்பாளரிடம் , “என்னிடம் எல்லா ராகசியத்தையும் கேட்பீர்கள் போல, அதெல்லாம் நான் சொல்ல முடியாது. நான் இந்த படத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் 2 பேர் கிட்ட பெர்மிஷன் வாங்கவேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : இன்ஸ்டாவில் கூலி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்

மேலும் தொகுப்பாளர் குரேஷி அவரிடம், அண்ணா நீங்க கேமரா முன்னாடி நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கிறதா? என கேட்டார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த நெல்சன் திலீப்குமார், “குரேஷின் நீ படம் தயாரித்தால் அதில் நான் ஹீரோவாக நடிக்க தயார்” என பேசியிருந்தார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறன் படம் குறித்து நெல்சன் பேசிய வீடியோ

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் புதிய திரைப்படமானது உருவாகிவருகிறது. இப்படத்தை வி கிரியேஷன் நிறுவனத்தின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.