ஜெயிலர் 2 படம் குறித்து முக்கிய தகவலை கூறிய நெல்சன் திலீப்குமார்

Director Nelson Dilipkumar: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முன்னதாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் ஜெயிலர். இந்தப் படத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகின்றது. சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட போது படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படம் குறித்து முக்கிய தகவலை கூறிய நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்

Published: 

02 Sep 2025 11:25 AM

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) சின்னத்திரையில் இயக்குநராக பல நிகழ்ச்சிகளை இயக்கி உள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்து இருந்தார். டார்க் காமெடியை மையமாக வைத்து இவர் உருவாக்கும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு பாணி இருப்பது போல நெல்சன் தீலீப் குமார் டார்க் காமெடி பாணியை கையில் எடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படமே மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இரண்டாவதாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் நெல்சன் மூன்றாவதாக தளபதி விஜய் உடன் கூட்டணி வைத்தார். அதன்படி பீஸ்ட் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியிலேயே அடுத்தப் பாகத்திற்கான லீடை இயக்குநர் கொடுத்ததால் படம் நிச்சயமாக இரண்டாம் பாகம் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

விறுவிறுப்பாக நடைப்பெற்றுவரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தின் ஷூட்டிங் முடிந்த உடனே ஓய்வு இன்றி அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வந்துவிட்டார். தொடர்ந்து பிசியாக படத்தின் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் படம் சிறப்பாக வந்துள்ளது என்றும், தான் படம் எப்படி வரவேண்டும் என்று எழுதியது போலவே ஜெயிலர் 2 படம் சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

Also Read… நடிகை சாய் தன்ஷிகாவை விட நடிகர் விஷால் இத்தனை வயது மூத்தவரா? 

ஜெயிலர் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் தலைப்பு தெரியுமா? இணையத்தில் வைரலாகும் தகவல்!