Nagarjuna : லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த்தின் கூலி படம்.. நடிகர் நாகார்ஜுனா கொடுத்த ரிவியூ!

Nagarjunas Review Of Coolie Movie : கோலிவுட் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படம்தான் கூலி. நடிகர் ரஜினிகாந்த் உட்பட பான் இந்திய நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் இப்படத்தில் நடித்த டோலிவுட் நடிகர் நாகார்ஜுனா இப்படத்திற்கு விமர்சனம் கொடுத்திருக்கிறார், அது குறித்து பார்க்கலாம்.

Nagarjuna : லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த்தின் கூலி படம்.. நடிகர் நாகார்ஜுனா கொடுத்த ரிவியூ!

கூலி திரைப்படம்

Published: 

12 Jun 2025 20:03 PM

தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இறுதியாக வேட்டையன் படமானது வெளியானது. கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜுடன் (Lokesh Kanagaraj) கூலி (Coolie) திரைப்படத்தில் இணைந்தார். இந்த படத்தின் அறிவிப்புகளும் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்திலே வெளியானது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் நடைபெற்று, வெகு சிறப்பாக ஷூட்டிங்கும் நடந்து வந்தது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் நடிகர்கள் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திர ராவ், அமீர்கான் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இதில் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பான் இந்திய நடிகர்கள் இணைந்தது நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனா , தனுஷுடன் குபேரா படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார். இப்படத்தின் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், கூலி படத்திற்கு விமர்சனங்கள் கொடுத்திருக்கிறார்.

கூலி படம் குறித்து நடிகர் நாகார்ஜுனா பேசிய விஷயம் :

குபேரா திரைப்படம் தொடர்பாக ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் நாகார்ஜுனா கலந்துகொண்டுள்ளார். அதில் பேசிய நாகார்ஜுனா, “கூலி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை எவ்வாறு அறிமுகப்படுத்தினார் என நான் உண்மையிலே யோசித்தேன். அது நானா என்று, எனது கதாபாத்திரம் கூலி படத்தில் அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகக் கூலி திரைப்படம் ‘விசில் விசில் விசில்’ திரைப்படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். தற்போது அவர் கொடுத்த ரிவியூ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் நாகார்ஜுனா பேசிய வீடியோ :

குபேரா திரைப்படம் :

இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் குபேரா. இந்த படத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு அடுத்த கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்திருக்கிறார். அரசியல் மற்றும் பணம் சார்ந்த கதைக்களத்துடன் இந்த குபேரா படமானது உருவாகியிருப்பதாக இயக்குநர் சேகர் கம்முலா கூறியிருந்தார். அவ்வாறு மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025,, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படமானது நிச்சயமாக பான் இந்திய வெற்றி திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.