இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் நான் இந்த இடத்தில் இருக்க காரணம் – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்

Director Ashwath Marimuthu said Vetrimaaran is a reason for his cinema journey: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக உள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன அந்த ஒரு வார்த்தைதான் நான் இந்த இடத்தில் இருக்க காரணம் - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்

அஸ்வத் மாரிமுத்து

Updated On: 

19 Mar 2026 17:51 PM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே வெற்றிப் படங்களை கொடுத்து நல்ல வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவர் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஓ மை கடவுளே என்ற படத்தினை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். ஃபேண்டசி லவ் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எந்த மாதிரியான கதையை எந்த நடிகரை வைத்து இயக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி அஸ்வத் மாரிமுத்து இரண்டாவதாக இயக்கிய படம் டிராகன். இந்தப் படத்தில் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார்.

கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்த டிராகன் படம் அந்த ஆண்டில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் சாதனைப் படைத்தது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நடிகர் சிம்புவை வைத்து இயக்க உள்ள படத்தின் பணிகளில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

வெற்றிமாறன் சொன்ன வார்த்தைதான் நான் இந்த இடத்தில் இருக்க காரணம்:

அந்தப் பேட்டியில் அஸ்வத் மாரிமுத்து கூறியதாவது, தான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது ஒரு குறும்படம் எடுத்தேன். அது கல்லூரியில் உள்ள பலருக்கும் பிடித்தது. அப்போது எனது ஆங்கில ஆசிரியை நீ ஏன் நேரத்தை வீணடிக்காதே என்றார். அப்போது எனக்கு 4 அரியர் இருந்தது. அதனை முடித்துவிட்டு வேலைக்கு செல்லவேண்டும் என்று இருந்தபோதுதான் நாளைய இயக்குநர் என்ற போட்டியை தொடங்கினர். அதில் நான் உட்பட தற்போது உள்ள பல இயக்குநர்கள் கலந்துகொண்டோம்.

இப்படி இருக்கும் சூழலில் அந்த போட்டியில் இறுதியில் நான் இயக்கிய குறும்படம் வெற்றிபெறவில்லை. ஆனாலும் அதனை குறிப்பிட்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசிய வார்த்தைகள் என்னை சினிமாவில் இந்த இடத்திற்கு கொண்டு வந்தது என்று தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இதுதான் எங்களுக்கு பண்டிகை நாள்… கருப்பு ரிலீஸ் தேதியை பார்த்ததும் கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்!

இணையத்தில் வைரலாகும் அஸ்வத் மாரிமுத்துவின் பேச்சு:

Also Read… கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் எப்படி இருக்கிறது? மக்களின் விமர்சனம் இதோ

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி