Anirudh : நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி.. மதராஸி பட பாடல்கள் வரவேற்பு குறித்து அனிருத் நெகிழ்ச்சி!

Anirudh Thanks To Fans : பான் இந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவரின் இசையமைப்பில் மதராஸி படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், அனிருத் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Anirudh : நீங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி.. மதராஸி பட பாடல்கள் வரவேற்பு குறித்து அனிருத் நெகிழ்ச்சி!

அனிருத்

Published: 

28 Aug 2025 21:30 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் மதராஸி (Madharaasi). இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) இயக்க, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனமானது இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன், முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இப்படங்களை அடுத்ததாக இவர் தமிழில் மீண்டும் நடித்திருக்கும் படம்தான் மதராஸி. இப்படத்தில் இவர் அதிரடி ஆக்ஷன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இதில் நடிகர் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth)  கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த மதராஸி படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்தின் கூட்டணியில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் இப்படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அனிருத் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அனிருத்தின் திருமணம் எப்போது? சிவகார்த்திகேயன் சொன்ன ஆச்சர்ய பதில் இதோ!

மதராஸி பட பாடல்கள் குறித்து அனிருத் வெளியிட்ட எக்ஸ் பதிவு

இந்த பதிவில் இசையமைப்பாளர் அனிருத், “மதராஸி திரைப்படத்தின் பாடல்களுக்கு நீங்கள் பொழியும் அன்பிற்கு ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். எங்கள் பாடல்களும் பின்னணி இசையும், விதையுடன் சில மாதங்கள் மிகவும் அசத்தலாக இருந்தது என்பது எனக்கு தெரியும். இந்த அற்புதத்திற்கு, எங்களின் கடினமான உழைப்பாளிகள் குழு மற்றும் உங்களின் தொடர்ச்சியான அன்புதான். அது இல்லாமல் எதுவும் இல்லை” என இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சூப்பர் வுமனாக கல்யாணி பிரியதர்ஷன்.. லோகா திரைப்படம் எப்படி இருக்கு?

மதராஸி திரைப்படத்தில் அனிருத்

அனிருத் இசையமைப்பில் வெளியாகிவரும் படங்களின் பாடல்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இவரின் இசையமைப்பில் இறுதியாக வெளியான படம் கிங்டம். விஜய் தேவரகொண்டாவின் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் முதல் பின்னணி இசை வரை ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர்.

அதை தொடர்ந்து மதராஸி படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரின் இசையமைப்பில் மதராஸி படத்தில் மட்டும் சுமார் 9 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட படமான ஜன நாயகன் படத்திற்கும் அனிருத்தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.