GV.Prakash: அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப்படம்.. சிறப்பான அப்டேட்டை கொடுத்த ஜி.வி.பிரகாஷ் குமார்!
Ajith Kumar Car Racing Documentary Update: கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக கலக்கிவருபவர் அஜித் குமார். இவர் தற்போது கார் ரேஸிங்கில் முழு ஆர்வம் காட்டிவருகிறார். அந்த வகையில் இவரின் கார் ரேஸிங் ஒரு ஆவணப்படமாக உருவாகிவரும் நிலையில், அந்த படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் அப்டேட் கொடுத்துள்ளார்.

அஜித் குமார் மற்றும் ஜி.வி. பிரகாஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar). இவர் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். அந்த வகையில் இவரின் இசையமைப்பில், சரி நடிப்பிலும் சரி தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் இசையமைப்பிலும், நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) முன்னணி நடிப்பிலும் வெளியான திரைப்படம்தான் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படமானது வெளியாகி சுமார் ரூ 230 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது.அந்த வகையில் அஜித் மற்றும் ஜிவி.பிரகாஷ் குமார் காம்போவில் முதல் முறையாக இணைந்த திரைப்படமாக இது அமைந்திருந்தது. இந்த படமானது 2025ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டிருந்தது. இதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Aadhik Ravichandran) இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மீண்டும் தற்போது அஜித் குமாருடன் இணைந்துள்ளார்.
அஜித் குமாரின் கார் ரேஸிங் மொத்தமாக ஒரு ஆவணப்படமாக உருவாகிவரும் நிலையில், இதை இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கான இசையமைப்பு பணியில் தீவிரமாக இருப்பதாக ஜி.வி. பிரகாஷ் குமார் அப்டேட் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்? வைரலாகும் தகவல்
அஜித் குமாரின் ஆவணப்படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Work mode pic.twitter.com/C7oCMPC14b
— G.V.Prakash Kumar (@gvprakash) December 30, 2025
அஜித் குமாரின் ரேஸிங் ஆவணப்படத்தின் ரிலீஸ் எப்போது :
நடிகர் அஜித் குமார் கிட்டத்தட்ட 1 ஆண்டுகாலமாக இந்த கார் ரேஸிங்கில் தீவிரமாக இருந்துவருகிறார். இந்தியா மற்றும் இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விதத்தில் தனது அணியுடன் கார் ரேஸில் கலந்துகொண்டுவந்தார். இதுவரை கிட்டத்தட்ட 4 போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த 24H கார் ரேஸிலும் தனது அணியுடன் அஜித் குமார் கலந்துகொண்டார். இந்த போட்டியில் அஜித் குமாரின் அணியானது 4வது இடத்தை பிடித்திருந்தது.
இதையும் படிங்க: அனைவரும் எதிர்பார்த்த கூட்டணி.. கமல்ஹாசனுடன் இணைகிறாரா வெற்றிமாறன்?
இந்த ரேஸிங்கின்போதுதான் அஜித் குமாரின் கார் ரேஸ் பந்தயம் ஒரு ஆவணப்படமாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் நிலையில், ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார். இது தொடர்பான அப்டேட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அஜித்தின் இந்த ஆவணப்படம் வரும் 2026ம் ஆண்டு மே 1ம் தேதியில் அஜித் குமாரின் பிறந்தநாளில் வெளியாகவுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.