இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் முரளி காலமானார்!
Music Composer Sabesh Murali : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமானவர் சபேஷ் முரளி. இவரது இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் இன்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சபேஷ் முரளி
கோலிவுட் சினிமாவில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் இசையமைப்பாளர் தேவா (Music Director Deva). தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பல ஹிட் பாடல்களை இசையமைத்துள்ளார் தேவா. இவரது இசையில் முன்னதாக வெளியான பாடல்கள் கூட தற்போது ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில் உள்ள பலரும் சினிமாவில் பல வேலைகளை செய்து வருகின்றனர். அதன்படி தேவாவின் மகன் மற்றும் தம்பியும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பலப் படங்களில் பணியாற்றியுள்ளனர். மேலும் தேவாவின் தம்பி மகனான நடிகர் ஜெய் பலப் படங்களில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி இசையமைப்பாளர் தேவாவின் தம்பிதான் இசையமைப்பாளர் சபேஷ் முரளி.
கடந்த 2001-ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நாயகனாக நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் சமுத்திரம். இந்தப் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் சபேஷ் முரளி. அதன்படி இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படமே இவருக்கு வெற்றியைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சமுத்திரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Also Read… விஜய், அஜித், சிவகார்த்திகேயன் யாருடன் மீண்டும் படம் நடிப்பீங்க? வித்யுத் ஜம்வால் சொன்ன விசயம்
இசையமைப்பாளர் சபேஷ் முரளி காலமானார்:
சமுத்திரம் படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் சபேஷ் முரளி இசையில் வெளியான தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, முதல் கனவே, கூடல் நகரம், இந்திரலோகத்தில் நா அழகப்பன், பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாலையம் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படங்களில் எல்லாம் இவரது பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் 2017-ம் ஆண்டு வரை இசையமைத நிலையில் தற்போது உடல் நலக் குறைவு காரணமாக இசையமைப்பாளர் சபேஷ் முரளி இன்று காலமானார். அவரது மறைவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Also Read… சிம்புவின் நடிப்பில் வெளியான வல்லவன் படம் 19 ஆண்டுகளை நிறைவு செய்தது!