அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த நடிகை மிருணாள் தாக்கூர் – வைரலாகும் தகவல்

Mrunal Thakur : சின்னத்திரையில் நடிகையாக பிரபலம் ஆகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை மிருணாள் தாக்கூர். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இவர் எந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது

அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த நடிகை மிருணாள் தாக்கூர் - வைரலாகும் தகவல்

நடிகை மிருணாள் தாக்கூர்

Published: 

27 Oct 2025 17:15 PM

 IST

சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை மிருணாள் தாக்கூர் (Actress Mrunal Thakur). இவரது நடிப்பில் வெளியான சீரியல்களை தமிழில் டப் செய்து ஒளிபரப்பிய போதே தமிழ் சினிமாவில் நடிகை மிருணாள் தாக்கூருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து முதன் முதலாக மராத்தி மொழியில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை மிருணாள் தாக்கூர். தொடர்ந்து சின்னத்திரையில் நடிகையாக வலம் வந்தவர் தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து வருகிறார். அதன்படி இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மாறிமாறி நடித்து வருகிறார். தொடர்ந்து நடிகை மிருணாள் தக்கூரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வருகின்றது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான சீதா ராமம் படத்தின் மூலம் பான் இந்திய அளவில் பிரபலம் ஆனார்.

இந்தப் படத்தில் இவர் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து பான் இந்திய அளவில் நடிகை மிருணாள் தாக்கூர் மிகவும் பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான சன் ஆஃப் சர்தார் 2 படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த நடிகை மிருணாள் தாக்கூர்:

இந்த நிலையில் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் அடுத்தடுத்துப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை மிருணாள் தாக்கூர். இந்த நிலையில் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் AA22xA6 படத்தில் நடிக்க நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஜீனி படத்தின் அப்தி அப்தி 18 மில்லியன் பார்வைகளைக் கடந்தது

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து மலையாள சினிமாவில் வெளியான வைரஸ் படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்!