தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் மயக்கம் என்ன படத்தின் தெலுங்கு வெர்ஷன்!

Actor Dhanush: கோலிவுட் சினிமாவில் நடிகராக தனுஷ் அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது பான் இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்தில் தெலுங்கு ரீமேக் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் மயக்கம் என்ன படத்தின் தெலுங்கு வெர்ஷன்!

மிஸ்டர் கார்த்திக்

Published: 

22 Jul 2025 17:24 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பது போல தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நேரடியாக அந்த மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழில் வெளியாகும் படங்களின் ரீமேக்குகள் அந்தந்த மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் பிறந்த நாள் வருகின்ற 28-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மிஸ்டர் கார்த்திக் என்ற படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படம் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியான மயக்கம் என்ன படத்தின் தெலுங்கு டப்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மயக்கம் என்ன. இந்தப் படத்தை இயக்குநர் செல்வராகவன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ரிச்சா நாயகியாக நடித்து இருந்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.

படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read…  தனுஷ் – எச்.வினோத் கூட்டணியை உறுதி செய்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் – வைரலாகும் வீடியோ!

தனுஷ் பிறந்த நாளில் மீண்டும் வெளியாகும் மிஸ்டர் கார்த்திக் படம்:

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தை தெலுங்கில் மிஸ்டர் கார்த்திக் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்குகளில் வெளியிட்ட போது படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த தெலுங்கு டப்பிங் படம் வருகின்ற 26-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் தனுஷின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தெலுங்கு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கவனம் பெறும் ட்விட்டர் பதிவு:

Also Read… HBD Yogi Babu: காமெடியனாகவும், நாயகனாகவும் ஜொலிக்கும் நடிகர் யோகி பாபுவிற்கு ஹேப்பி பர்த்டே!