அண்ணா மாதிரி பார்த்தேன் அந்த இயக்குநர் இப்படி பண்ணுவார்னு நினைக்கல – மாஸ்டர் மகேந்திரன்
Master Mahendran talks about famous director: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக வலம் வருபவர் நடிகர் மாஸ்டர் மகேந்திரன். இவர் பேட்டி ஒன்றில் தன்னிடம் ஒரு இயக்குநர் நடந்துகொண்ட விதத்தை பேசியது வைரலாகி வருகின்றது.

மாஸ்டர் மகேந்திரன்
தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் நாட்டாமை. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் மாஸ்டர் மகேந்திரன். அந்தப் படத்தில் ஒரு பஞ்சாயத்து சீனில் குழந்தையாக வந்து சாட்சி சொல்லும் காட்சி தற்போது வரை ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் மாஸ்டர் மகேந்திரன். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். நாயகனாக நடித்து வந்த மாஸ்டர் மகேந்திரனின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து படங்களில் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்து வருகிறார் மாஸ்டர் மகேந்திரன்.
தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக பல முயற்சிகளை மாஸ்டர் மகேந்திரன் எடுத்து இருந்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கு. தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடிவரும் மாஸ்டர் மகேந்திரன் இயக்குநர் ஒருவரிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த இயக்குநர் இப்படி பண்ணுவார்னு நினைக்கல:
ஒரு அண்ணனைப் போல நான் மதித்த ஒரு இயக்குனர், இப்படி நடந்துகொள்வார் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர் மிகச்சிறந்த ஒரு இயக்குனர். எனக்கு மிகவும் நெருக்கமானவர். இந்தியா முழுவதும் மூன்று மொழிகளில் அவர் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அவரிடம் ஒரு வாய்ப்பு கேட்டுச் சென்றபோது, நான் ‘அண்ணாவை’ சந்திக்க விரும்புவதாக அங்கிருந்தவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், சார் ஒரு கூட்டத்தில் இருக்கிறார், தயவுசெய்து காத்திருங்கள், என்று கூறினார்கள். நான் காலை முதல் மதியம் வரை காத்திருந்தேன். பின்னர் அவர்கள், சார் மதிய உணவை முடித்துவிட்டுத் தூங்கச் செல்வார். நீங்கள் மாலை வாருங்கள்,என்று கூறினார்கள்.
அதனால் நான் மாலையில் மீண்டும் வந்து, இரவு சுமார் 8 மணி வரை காத்திருந்தேன். அதன்பிறகு, இறுதியாக சார் வெளியே வந்து, மகேந்திரன் எப்போது வந்தார்? என்று கேட்டார். நான் காலை முதல் காத்திருக்கிறேன் என்பது அவருக்கு மிக நன்றாகவே தெரியும்; ஆனாலும், தனக்குத் தெரியாதது போல அவர் என்னிடம் விசாரித்தார் என்று தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… டொவினோ தாமஸ் நடிப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது காட்டுச் செண்பகம் வீடியோ பாடல்!
இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் மகேந்திரன் பேச்சு:
“I never expected a director whom I respected like an elder brother to behave this way. He is a very big director, someone I was very close to. He has directed films in three languages across India.
When I went to ask him for an opportunity, I told them I wanted to meet ‘anna’ .… pic.twitter.com/L0IVWyQ4ry
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) March 14, 2026
Also Read… ஓடிடியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் தேரே இஸ்க் மெய்ன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!