மஞ்சுமல் பாய்ஸ் பட இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் பாலன்… அப்டேட் இதோ!

Director Chidambaram: கடந்த ஆண்டு மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மஞ்சுமல் பாய்ஸ். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் இயக்குநர் சிதம்பரம். இவரது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

மஞ்சுமல் பாய்ஸ் பட இயக்குநர் இயக்கத்தில் உருவாகும் பாலன்... அப்டேட் இதோ!

பாலன்

Updated On: 

18 Aug 2025 11:11 AM

மலையாள சினிமாவில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி வெளியான படம் ஜான்.இ.மேன். இந்தப் படத்தை இயக்குநர் சிதம்பரம் இயக்கி இருந்தார். காமெடி ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் சிதம்பரம் (Director Chidambaram). இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மஞ்சுமல் பாய்ஸ். கேரளாவில் மஞ்சுமல் என்ற பகுதியில் இருக்கும் இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுழா வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு உள்ள குணா குகையை சென்று பார்க்கும் போது எதிர்பாராத விதமாக டெவில்ஸ் கிட்சன் என்று அழைக்கப்படும் ஒரு படுகுழிக்குள் ஒருவர் விழுந்து விடுகிறார். அவரை அவரது நண்பர்கள் அனைவரும் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை.

இது கேரளாவில் உள்ள மஞ்சுமல் என்ற பகுதி இளைஞர்களுக்கு நடந்த உண்மை சம்பவம் ஆகும். இதனை அடிப்படையாகா வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி என பான் இந்தியா அளவில் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் வசூலிலும் இந்தப் படம் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்கியதற்கு பிறகு இயக்குநர் சிதம்பரத்திற்கு இந்தி சினிமாவில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆவேஷம் பட எழுத்தாளருடன் இணைந்த மஞ்சுமல் பாய்ஸ் இயக்குநர்:

இந்த நிலையில் மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்திற்காக இயக்குநர் சிதம்பரம் ஆவேஷம் பட எழுத்தாளர் ஜீத்து மாதவனுடன் இணைந்துள்ளார். மேலும் இந்தப் படத்தை தெஸ்பியன் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தற்போது தமிழில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக சுஷின் ஷியாம் கமிட்டாகியுள்ள நிலையில் எடிட்டராக விவேக் ஹர்ஷன், ஒளிப்பதிவாளராக ஷைஜு காலித் ஆகியோரும் கமிட்டாகியுள்ளனர். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read… துப்பாக்கி தான் இரண்டாம் பாகம் எடுக்க சரியா இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன விசயம்

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… வடிவேலு – ஃபகத் பாசிலின் மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்!