இரண்டு ஆண்டுகளைக் கடந்தது மம்முட்டியின் மிரட்டலான நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த பிரமயுகம் படம்!

2 Years Of Bramayugam Movie: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிரமயுகம் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளைக் கடந்தது மம்முட்டியின் மிரட்டலான நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த பிரமயுகம் படம்!

பிரமயுகம் படம்

Published: 

15 Feb 2026 15:52 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. மலையாள சினிமாவை பொருத்தவரை ஒரு சிறப்பு உள்ளது இந்த துறையில் உள்ள நடிகர்கள் நாயகனாக நடித்தால் அதன்பிறகு நடிக்கும் படங்களில் எல்லாம் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற எந்த எண்ணமும் இல்லாமல் தொடர்ந்து வில்லன், காமெடியன் மற்றும் சிறப்பு கதாப்பாத்திரங்கள் என அனைத்திலும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் மம்முட்டி நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டிய படம் தான் பிரமயுகம். இந்தப் படம் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மலையாள சினிமாவில் வெளியானது. இந்தப் படம் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தினை இயக்குநர் ராகுல் சதாசிவம் எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் மம்முட்டி உடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரத, அமல்டா லிஸ், மணிகண்டன் ஆர். ஆச்சாரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சக்ரவர்த்தி ராமச்சந்திரா மற்றும் எஸ். சசிகாந்த் ஆகியோர் தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கிர்ஸ்டோ சேவியர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் வரவேற்பைப் பெற்றது.

இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது பிரமயுகம் படம்:

ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவான இந்த பிரமயுகம் படத்தின் கதை 17-ம் நூற்றாண்டில் நடைபெறுவது போல எடுக்கப்பட்டு இருந்தது. இதில் நடிகர் மம்முட்டி ஒரு கொடூரமான நிலக்கிழாராக நடித்துள்ளார். மேலும் தனக்கு வேலை செய்யும் நபர்களை அடிமைகளைப் போடல நடத்தும் எண்ணம் கொண்டவராக நடித்து மக்களை மிரட்டியுள்ளார் என்றே சொல்லலாம். இந்தப் படம் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கார் அகாடமி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ததைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.

Also Read… சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசனின் பட அறிவிப்பு எப்போது? – சர்ப்ரைஸாக வெளியான வீடியோ

பிரமயுகம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் காதலா? மலையாள சினிமாவில் இந்த அழகான சூஃபியும் சுஜாதாயும் படத்தை பார்க்க தவறாதீர்கள்!

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?