நீங்க டெரரிஸ்டா? போலீசா? வெளியானது பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்

Patriot Movie Malayalam Trailer Out Now | மலையாள சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்துள்ள படம் பேட்ரியாட். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நீங்க டெரரிஸ்டா? போலீசா? வெளியானது பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்

பேட்ரியாட்

Published: 

04 Apr 2026 19:34 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இரண்டு ஜாம்பவான்களாக 50 ஆண்டுகளைக் கடந்தும் சினிமாவில் நடிகர்களாக வலம் வருவது போல மலையாள சினிமாவில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் 50 ஆண்டுகளுக்கு மேலாக நாயகன்களாக வலம் வருகிறார்கள். மலையாள சினிமாவில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து அடிக்கடி இணைந்து நடித்து வந்தனர். அப்படி அவர்கள் இருவரும் இணைந்து நடித்தப் படங்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகா மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் இணைந்து நடிக்காமல் இருந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்திற்கு பேட்ரியாட் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வெளியானது பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர்:

நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த பேட்ரியாட் படத்தின் ட்ரெய்லர் இன்று 04-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகி உள்ளது. மலையாள சினிமாவில் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் இந்த படத்தின் ட்ரெய்லரை நேரடியாக திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… தனுஷோட அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான் தான் நடிச்சு இருக்கனும் – நடிகர் பரத் ஓபன் டாக்

நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தென்னிந்திய சினிமாவில் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம்? லிஸ்ட் இதோ

Follow Us
Related Stories
இப்படி எல்லாம் ஒரு புகார் கொடுப்பாங்களா? இந்தியில் இந்த காதல் எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரி படத்தை மிஸ் செய்யாதீர்கள்!
Krithi Shetty: நான் CM- ஆனால் நிச்சயம் அந்த தண்டனையை கடுமையாக்குவேன் – கிரித்தி ஷெட்டி
நா ஒத்த விரல் காட்டுனா ஒன்னாகும் கூட்டம்தான்… ரீ ரிலீஸாகும் சிலம்பரசனின் சூப்பர் ஹிட் குத்து படம்!
LIK Movie: லவ் மட்டும் இருந்தா பத்தாது வாஸ்.. அதிரடி காதல் கதையில்.. வெளியானது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ட்ரெய்லர்!
அந்த படத்தில் நடிச்சா தப்பா போயிடுமோனு நினச்சு நோ சொல்லிட்டேன் – நடிகை வாணி போஜன்
Nooru Saami: எமோஷனல் பேமிலி கதையில்.. விஜய் ஆண்டனி – ஸ்வாசிகவின் நூறு சாமி பட டீசர் இதோ!
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்