சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்… நெகிழ்ந்து பேசிய மமிதா பைஜூ

Mamitha Baiju Talks About Suriya: மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை மமிதா பைஜூ. இவர் தற்போது சூர்யா 46 படத்தில் நடித்து முடித்த அனுபவம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 46 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்... நெகிழ்ந்து பேசிய மமிதா பைஜூ

சூர்யா 46 படக்குழு

Published: 

17 Feb 2026 17:54 PM

 IST

மலையாள சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை மமிதா பைஜூ. அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாயகியாக பலப் படங்களில் நடித்து வந்த நடிகை மமிதா பைஜூ தொடர்ந்து நாயகியாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கடந்த 2024-ம் ஆண்டு நடிகை மமிதா பைஜூ நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான பிரேமலு படம் அவரை தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிகை மமிதா பைஜூவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக தமிழ் சினிமாவில் மட்டும் மமிதா பைஜூவிற்கு பலப் படங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் நிலையில் நடிகை மமிதா பைஜூ நடிப்பில்ட் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் சூர்யா 46 படம். நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட மமிதா பைஜூ சூர்யா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா செய்த விசயம்:

சூர்யா 46 படப்பிடிப்பை நாங்கள் ரொம்ப ஜாலியா கழிச்சோம். சூர்யா சார் எப்பவும் ஸ்பெஷல் காஃபி சாப்பிடுவார், அது ரொம்ப நல்லா இருக்கும். நான் ஒரு தடவை சாரின் உதவியாளரிடம் இதைப் பத்திக் கேட்டேன், அன்றிலிருந்து ஷூட்டிங் முடியும் வரை, சார் எனக்கு தினமும் அந்தக் காஃபி கிடைக்கிறதா பாத்துட்டு இருந்தாரு. அது சின்ன விஷயமாத் தெரியலாம், ஆனா எனக்கு அது ரொம்ப முக்கியம் என்று மமிதா பைஜூ தெரிவித்து இருந்தார்.

Also Read… தமிழ் நாட்டில் தாய் கிழவி படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

இணையத்தில் வைரலாகும் மமிதா பைஜூ பேச்சு:

Also Read… அனிருத் இசையில் தி பாரடைஸ் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து வெளியானது அப்டேட்

Follow Us
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?
சிவபெருமானின் அவதாரம் - 100க்கும் மேற்பட்ட பெண்களை வன்கொடுமை செய்த கேப்டன் பாபா
ஈரானில் அமெரிக்க போர் விமானம் மீது தாக்குதல்
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்