அந்த காட்சியில் தனுஷ் சாரின் சட்டையை பிடிச்சி இழுத்துட்டேன்.. அதை மறக்கவே மாட்டேன் – மமிதா பைஜூ!
Mamitha Baiju About Dhanush: தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்கள் மத்தியில், பிரபலமாகிவருபவர் மமிதா பைஜூ. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இவர், கர படத்தின் ஷூட்டிங்கின்போது, தனுஷின் சட்டையை பிடித்து இழுத்த காட்சியில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

மமிதா பைஜூ
நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) தற்போது தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான டியூட் படமானது, எதிர்பார்த்த வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டில் வெளியான முதல் படம்தான் கர (Kara). இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்க, தனுஷ் (Dhanush) கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படமானது ஒரு வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதைக்களத்தில் உள்ளது. இந்த படமானது கடந்த 2026 ஏப்ரல் 30ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது.
அந்த வகையில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருக்கிறதாம். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த மமிதா பைஜூ, அதில் கர படத்தில் தனுஷின் சட்டையை இழுத்து அவரிடம் கடுமையாக கேள்வி கேட்கும் காட்சியில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: ஒணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளி வெளியகும் பிரித்விராஜின் கலிஃபா படம் – அப்டேட் இதோ
தனுஷுடன் சட்டையை பிடித்து நடித்த காட்சி குறித்து சுவாரஸ்ய விஷயத்தை பகிர்ந்த மமிதா பைஜூ:
நடிகை மமிதா பைஜூ பேசுகையில், “கர பட ட்ரெய்லரில், நான் தனுஷ் சாரிடம் பேசுவதுபோல ஒரு காட்சி இருக்கிறதல்லவா, அந்த காட்சியை இரவு ஒரு 2 மணியளவில்தான் எடுத்தாங்க. அந்த காட்சியின்போது நான் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன், ஏனென்றால் அது கொஞ்சம் நீளமான காட்சி மற்றும் கொஞ்சம் கஷ்டமான காட்சியும் கூட. அந்த காட்சியில் நான், தனுஷ் சாரின் சட்டை காலரை பிடித்து நான் இழுக்கவேண்டும்.
இதையும் படிங்க: சிறை பட அனிஷிமா அனில்குமாரின் அடுத்த திரைப்படம்… ஹீரோ யார் தெரியுமா?
அந்த காட்சியின் ஷூட்டிங் தொடங்கியது, நானும் தனுஷ் சாரின் காலரை இழுத்து பிடித்தேன். கொஞ்சமாக இல்லை பலமாகவே இழுத்துவிட்டேன். உடனே அவரிடம், “சாரி சார்” என சொன்னேன். உடனே தனுஷ் சார் என்னிடம், “இந்த காட்சிக்கு இதுதான் தேவை, நீங்க பண்ணுங்க எனக்கு பிரச்சனை இல்லை” என அவர் என்னிடம் சொன்னதாக மமிதா அதில் கூறியுள்ளார்.
கர திரைப்படம் குறித்து நடிகை மமிதா பைஜூ வெளியிட்ட பதிவு:
#KaraTrailer is here ✨
▶️ https://t.co/bY50BzjQy8#KaraFromApril30🤍
Directed by @vigneshraja89
Produced by @IshariKGanesh
A @gvprakash musical 🥁@dhanushkraja sir @VelsFilmIntl @velsmusicintl @kushmithaganesh @ThinkStudiosInd pic.twitter.com/AewRYljZrD— Mamitha Baiju (@_mamithabaiju) April 20, 2026
தனுஷின் கர திரைப்படமானது தற்போது திரையரங்குகளில் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது. இதில் மமிதா பைஜூவின் கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.