Malavika Mohanan: விமர்சனங்களை வளர்ச்சிக்கான படிக்கட்டாக பார்க்கிறேன் – மாளவிகா மோகனன்!

Malavika Mohanan About Criticism : தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் மாளவிகா மோகனன். இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் தன்மீது எழுப்பப்படும் விமர்சனங்களை சமாளிப்பது மற்றும் அதன் தாக்கம் குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

Malavika Mohanan: விமர்சனங்களை வளர்ச்சிக்கான படிக்கட்டாக பார்க்கிறேன் - மாளவிகா மோகனன்!

மாளவிகா மோகனன்

Updated On: 

13 Apr 2026 15:16 PM

 IST

நடிகை மாளவிகா மோகனன் (Malavika Mohanan) தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் மத்தியிலும் பிரபலான நடிகையாக இருந்துவருகிறார். இவர் இறுதியாக பிரபாஸிற்கு (Prabhas) ஜோடியாக தி ராஜா சாப் (The Raja Eaab) என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பைரவி என்ற வேடத்தில் நடித்திருந்த நிலையில், ரசிகர்களால் ரசிக்கப்பட்டார். அந்த வகையில் இவர் தமிழில் ஏற்கனவே தளபதி விஜய் முதல் ரஜினிகாந்த் போன்றவர்களுடன் படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் புதிதாக உருவாகியிருக்கும் சர்தார் 2 (Sadar 2) படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடிக்கும் நிலையில், மாளவிகா மோகனன் வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பதைக்காக கூரப்படுகிறது.

அந்த வகையில் இவர் வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடித்து விமர்சிக்கப்பட்டார். மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக ஹிருதயபூர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனால் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்துவந்து. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், தன்மீது வீசப்படும் விமர்சனகள் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த ஜன நாயகன் படம்… தயாரிப்பு நிறுவனத்திற்காக முக்கிய முடிவு எடுத்த நடிகர் விஜய்

விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த நடிகை மாளவிகா மோகனன்:

அந்த நிகழ்ச்சியில் பேசிய மாளவிகா மோகனன், “சினிமாவை பொறுத்தவரை விமர்சனங்களும், ஏச்சும் பேச்சுக்கள் வருவது சகஜமான ஒன்று. விமர்சனங்கள் வந்தால் வளர்க்கிறோம் என்றுதான் அர்த்தம். எனவே என்னைநோக்கி வீசப்படும் விமர்சனங்கள் என்றார் அம்புகளை எனது வளர்ச்சிக்காக படிக்கட்டுகளாகவே பார்க்கிறேன். எதையும் ஈசியாக கடந்து சென்றாலே போதும். எந்த பிரச்சனைகளும் வராது” என அதில் அவர் தெரிவித்திருந்தார். தற்போது நடிகை மாளவிகா சொன்ன கூற்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படத்தின் இசையமைப்பாளர் இவரா?

நடிகை மாளவிகா மோகனனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழில் சர்தார் 2 படத்திற்கு பிறகு, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாக்கெட் நாவல் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கியிருந்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜன் இயக்கிருக்கிறார். இந்த படமானது முற்றிலும் பணம் தொடர்பான கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவருகிறதாம். அந்த வகையில் இப்படம் வரும் 2027ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?