யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியான கூலி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கோரி படக்குழு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இரண்டு முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இன்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கூலி

Published: 

28 Aug 2025 12:22 PM

 IST

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த ஆக்‌ஷன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக படம் தணிக்கை குழுவிற்கு சென்றபோது அங்கு படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுட்தனர். இதனால் இந்த கூலி படத்தை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் திரையரங்குகளில் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டு 18 வயதிற்கு அதிகமானோர் மட்டுமே திரையரங்குகளில் கூலி படத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு படத்தில் எந்தவித வன்முறை காட்சிகளும் இல்லை. அதனால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருந்தால் குடும்பத்தினருடன் வந்து படத்தை பார்த்து இருப்போம் என்று தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கூலி படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் யு/ஏ சான்றிதல் கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வழக்கின் முதல் விசாரனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு வந்தது. இரு தரப்பின் விசாரணையை கேட்ட நீதிபதிகள் வழக்கை 25-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டிற்கு ஒத்திவைத்தனர். அன்று வழக்கு விசாரணை நடைப்பெற்ற பிறகு வழக்கின் விசாரனையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

கூலி படக்குழு தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய காரணம் என்ன?

இந்த நிலையி இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் கூலி படத்தில் அதிப்படியான சண்டைக் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசுவது என அதிமாக இருப்பதால் இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க முடியாது என்று கூறி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Also Read… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது விஷாலின் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் இன்னும் இருக்கு… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் பஞ்ச் இதோ!

Related Stories
நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடல் முதலில் விக்ரம் படத்திற்காக பண்ணது – ஜிவி பிரகாஷ் குமார்
Sarathkumar: ரவிக்குமார் சார் ஷூட்டிங்கில் மைக்கை தூக்கி அடிப்பாரு.. சரத்குமார் சொன்ன உண்மை!
அருண் விஜய்யின் ரெட்ட தல படம் இப்படித்தான் இருக்கும்- இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் ஓபன் டாக்!
வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!
மாரி செல்வராஜ் உலகத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை – பைசன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் லிங்குசாமி
Dhruv Vikram: அதற்காக எங்க அப்பா ரொம்ப அடிச்சாரு.. காரணம் எங்க அக்காதான்- துருவ் விக்ரம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!