பூக்கி படத்திலிருந்து வெளியானது லவ் அட்வைஸ் வீடியோ பாடல்
Love Advice Song - Video | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது இசையில் தற்போது பூக்கி படத்தில் இருந்து லவ் அட்வைஸ் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சுக்ரன் என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் விஜய் ஆண்டனி. இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவரது இசையில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களை அவரது தயாரிப்பு நிறுவனமே தயாரித்த நிலையில் அந்தப் படங்களுக்கு அவரே இசையமைத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தனது நடிப்பில் வெளியான மார்கன் படத்தில் அவரது அக்க மகன் அஜய் திஷனை நடிகராக அறிமுகம் செய்து வைத்தார். இவர் தற்போது நாயகனாக நடிக்கும் படம் பூக்கி. இந்தப் படத்தை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் விஜய் ஆண்டனி நடிப்பில் இல்லாமல் தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அஜய் திஷன் உடன் இணைந்து நடிகர்கள் ஆர்.கே.தனுஷா, பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜே. ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா ஷர்மி, பிரியங்கா என பலர் நடித்துள்ளனர்.




பூக்கி படத்திலிருந்து வெளியானது லவ் அட்வைஸ் வீடியோ பாடல்:
இந்த பூக்கி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து லவ் அட்வைஸ் பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியே எழுதி, இசையமைத்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… அரசன் பட ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி… தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#LoveAdvice from #Pookie 💕
Feb 13 முதல் உலகமெங்கும் @PookieTheMovie @GC_Begins @AJDhishan990 @RkDhanusha @vijayantonyfilm pic.twitter.com/C7x6bvZCJW
— vijayantony (@vijayantony) December 20, 2025
Also Read… உலக புகழ்பெற்ற வைரல் டான்ஸை ஆடிய அஜித் மகன் ஆத்விக்… வைரலாகும் வீடியோ