அல்லு அர்ஜுன் படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சம்பளம் இத்தனை கோடிகளா? வைரலாகும் தகவல்
Lokesh Kanagaraj Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நிலையில் அடுத்ததாக அவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனை இயக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ மற்றும் கூலி ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் அவர் இயக்குநராக அடுத்தப் படத்தை இயக்குவதை ஒத்தி வைத்துவிட்டு தற்போது நடிகராக நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி வருகிறார். அதன்படி இந்தப் படம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் நிலையில் தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அல்லு அர்ஜுன் படத்திற்கு லோகேஷின் சம்பளம் இத்தனை கோடிகளா?
இந்த நிலையில் தொடர்ந்து இவர் அடுத்ததாக யார் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சுமார் 75 கோடிகள் சம்பளம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது… 8 ஆண்டுகளைக் கடந்தது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#LokeshKanagaraj offered a massive remuneration of 75Crs for #AlluArjun film😲🔥
Official announcement of the film Expected within a month🎬PS: For #Kaithi2, he has been offered less remuneration. Could be the reason why he chose AlluArjun film❓🤔 pic.twitter.com/GVtExfRrNG
— AmuthaBharathi (@CinemaWithAB) January 12, 2026
Also Read… பிக்பாஸில் சாண்ட்ரா செய்த செயல்… வெளிப்படையாக பிரஜினடம் பேசிய திவ்யா