Lokesh Kanagaraj: LCU-வில் கூலி படம் இல்லை.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

Lokesh Kanagaraj About Coolie Movie : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீசிற்கு தயாராகிவரும் திரைப்படம் கூலி. ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது ரிலீசிற்கு தயாராகி வருகிறது. இப்படமானது LCU கதைக்களத்துடன் தொடர்புடைய படமாக அமைந்துள்ளதாக என்ற கேள்விக்கு, லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

Lokesh Kanagaraj: LCU-வில் கூலி படம்  இல்லை..  லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்

Published: 

26 Jul 2025 09:30 AM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் தமிழில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தைத் தமிழ் உச்ச இயக்குநரான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில், ரஜினிகாந்த் முதலில் இணையும் திரைப்படமாகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் (இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திர ராவ், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சவுபின் ஷாஹிர் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியானது நெருங்கிவரும் நிலையில், படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தொடர்பாகச் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படமானது, லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படத் தொகுப்பில் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாள்… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் இதோ!

கூலி திரைப்படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் :

சமீபத்தில் நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார். அதில் அவர், “இந்தக் கூலி திரைப்படத்தில் நடிகர் கண்ணா ரவி ஒரு அங்கமாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் கூலி படமானது LCU படத் தொகுப்புடன் தொடர்புடைய திரைப்படம் என முதலில் பேசப்பட்டது.

ஆனால் நான், LCU-வில் அவரது கதாபாத்திரத்தைக் கொன்றதால், அவரை கூலி படத்தில் நடிக்கவைத்தேன்.,மேலும் அவர் ஒரு தனித்த கதையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த கூலி திரைப்படமானது நிச்சயமாக ஒரு தனி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ‘உலகம் ஏழைகளிடம் மோசமாக நடந்துகொள்ளும்… பணம் முக்கியம்….’ – லோகேஷ் கனகராஜ் அதிரடி

கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் ஆரம்பம் :

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி திரைப்படமானது முற்றிலும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, ரஜினிகாந்த் நடித்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தின் ப்ரீ புக்கிங் இன்னும் இந்தியாவில் ஆரம்பமாகவிட்டாலும், USA போன்ற வெளிநாட்டுகளில் படத்தின் ப்ரீ புக்கிங் ஆரம்பமாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நிச்சயமாக முதல் நாளில் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.