காமெடி ட்ராமா பாணியில் ஒரு தமிழ் வெப் சீரிஸ் பார்க்கனுமா? இந்த லோக்கல் டைம்ஸ் சீரிஸை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!

Local Times Tamil Web Series OTT Update Here: ஓடிடியில் தொடர்ந்து படங்கள் மட்டும் இன்றி இணையதள தொடர்களும் வெளியாகி வருகின்றது. அதன்படி தமிழ் மொழியில் வெளியாகி ரசிகர்களிடையே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் லோக்கல் டைம்ஸ் தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று பார்ப்போம்.

காமெடி ட்ராமா பாணியில் ஒரு தமிழ் வெப் சீரிஸ் பார்க்கனுமா? இந்த லோக்கல் டைம்ஸ் சீரிஸை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!

லோக்கல் டைம்ஸ்

Published: 

26 Mar 2026 21:49 PM

 IST

இந்திய சினிமாவில் ஓடிடியில் பயண்பாடு அதிகரித்த பிறகு மக்களிடையே படங்கள் பார்க்கும் பழக்கம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்கள் மட்டும் இன்றி இணையதள தொடர்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஓடிடியின் பயன்பாட்டிற்கு பிறகு அனைத்து மொழிகளிலும் உருவாகும் சிறந்த படைப்பிற்கு மக்கள் நல்ல வரவேற்பைப் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் இணையதள தொடரை குறித்து தற்போது பார்க்கலாம். லோக்கல் டைம்ஸ் என்று பெயரியப்பட்ட அந்த இணையதள தொடர் மொத்தம் 7 எபிசோடுகளைக் கொண்டு உள்ளது. காமெடி மற்றும் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த லோக்கல் டைம்ஸ் இணையதள தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த லோக்கல் டைம்ஸ் தொடரை இயக்குநர் நவீன் ஜார்ஜ் தாமஸ் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த தொடரில் நடிகர்கள் ரிஷிகாந்த், அப்துல் லீ, மொரிஷ் தாஸ், அத்விதா ஆறுமுகம், ஆர். பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி, நந்திதா ஸ்ரீகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு இந்த லோக்கல் டைம்ஸ் தொடர்ந்து அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி உள்ளது.

லோக்கல் டைம்ஸ் இணையதள தொடர் எப்படி இருக்கு?

மக்களிடையே வரவேற்பைப் பெறாமல் தொடர்ந்து நட்டத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் ஒரு உள்ளூர் செய்தித்தாளைக் காப்பாற்ற போராடும் நான்கு நண்பர்களின் பயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது இந்த லோக்கல் டைம்ஸ் தொடர். சின்னி ஜெயந்தின் பேரன் ரிஷிகாந்த் தனது தாத்தா தொடங்கிய நம்ம செய்தி என்ற அச்சு ஊடகத்தை தொடர்ந்து நடத்த முயற்சி செய்தி வருகிறார்.

Also Read… சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

இவருக்கு உதவியாக இவருடன் அப்துல் லீ, மொரிஷ் தாஸ், அத்விதா ஆறுமுகம் ஆகிய 3 நண்பருகளும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து நட்டத்தில் ஓடும் அந்த அச்சு ஊடகத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை மிகவும் காமெடியாக காட்டியுள்ளார் இயக்குநர் நவீன் ஜார்ஜ் தாமஸ். காமெடியான இணையதள தொடரைப் பார்க்க விரும்பும் இணையதள ரசிகர்கள் இதனை மிஸ் செய்யாமல் பாருங்கள். இந்த தொடர்ந்து தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..