2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
Highly Awaited Tamil Films In 2026: தமிழ் சினிமாவில் 2025ம் ஆண்டில் பல்வேறு நடிகர்களின் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது. அதில் ரஜினிகாந்தின் கூலி படம்தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் வரும் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2026 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படங்கள்
ஜன நாயகன் திரைப்படம் (Jana Nayagan) : இந்த ஜன நாயகன் படமானது தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி படம் என்பதால் பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளுடன் தயாராகிவருகிறது. இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், ஒரு குற்றமும் பின்னணியும் சார்ந்த கதைக்களத்தில் இந்த படமானது தயாராகிவருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இந்த படத்தை ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
அந்த வகையில் சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வரும் 2026ம் ஜனவரி 9ம் தேதியில் வெளியாகிறது. இதுதான் தமிழ் சினிமாவில் 2026ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த படம் 2026ல் அதிகம் வசூல் செய்யும் தமிழ் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மணி ரத்தினத்துடன் இணையும் விஜய் சேதுபதி- சாய் பல்லவி… படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
ஜன நாயகன் படத்தின் சாட்டிலை உரிமை குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..
Happy to announce that @ZeeTamil has bagged the Satellite rights 🔥#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @VishalMMishra @Lyricist_Vivek… pic.twitter.com/cVa4giu1Rd
— KVN Productions (@KvnProductions) December 19, 2025
ஜெயிலர் 2 திரைப்படம் (Jailer 2):
தலைவர் ரஜினிகாந்தின் (Rajinikanth) 172வது திரைப்படமாக உருவாகிவருவதுதான் ஜெயிலர் 2. இந்த படத்தை ஜெயிலர் 1 படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் நிலையில் சன் பிக்சர்ஸ் த்யாரித்துவருகிறது. இந்த படமானது ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சி கதைக்களத்தில் தயாராகிவரும் நிலையில், கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இப்பட ஷூட்டிங் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இப்படம் வெளியாகி வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படமும் 2026ம் ஆண்டில் அதிக பட்ஜெட்டில், அதிக வசூல் எதிர்பார்க்கப்படும் படமாக அமைந்துள்ளது.
கருப்பு திரைப்படம் (Karuppu) :
நடிகர் சூர்யாவின் (Suriya) 45வது திரைப்படமாக உருவாகியுள்ளதுதானா கருப்பு. இப்படம் ஆரம்பத்தில் சூர்யா45 என் தற்காலிக டைட்டிலில் அழைக்கப்பட்டுவந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் டைட்டிலை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இதற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது நீதி, ஆக்ஷ்ன் மற்றும் தெய்வீகம் சார்ந்த ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: 2025ல் டிரென்டிங்.. இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படத்தின் ட்ரெய்லர் எது தெரியுமா? முழு விவரங்கள் இதோ!
இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஷூட்டிங் முடியாத காரணத்தால 2026ம் ஆண்டிற்கு தள்ளிப்போனது. இப்படம் 2026ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பராசக்தி (Parasakthi) :
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் பராசக்தி. இது அவரின் 25வது படமாகும். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க, டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஸ்ரீலீலா, ரவி மோக, அதர்வா உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்தார் 2 (Sardar 2):
நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள படம்தான் சர்தார் 2. இப்படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்க, பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே.சூர்யா உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படமும் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுவும் தமிழில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று.
அரசன் திரைப்படம் (Arasan):
வெற்றிமாறன் (Vetrimaaran) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) கூட்டணியில் தயாராகிவரும் படம்தான் அரசன். இந்த படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க, வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். இந்த படமானது வட சென்னை படத்தின் உலகத்தில் மற்றொரு படமாக தயாராகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், 2025ம் ஆண்டு மே மாதத்திற்கு நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. பின் இப்படம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும். இது மக்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்படும் படத்தில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.