வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் – நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!

Panchalankurichi Movie: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் மறைந்த நடிகர் மாரிமுத்து. இவர் சினிமாவில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைவிட சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுதான் அதிகம். இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய போது பாஞ்சாலங்குறிச்சி படம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம் - நடிகர் மாரிமுத்து சொன்ன விசயம்!

மாரிமுத்து

Published: 

19 Oct 2025 20:44 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குநர் என ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் மறைந்த நடிகர் மாரிமுத்து (Actor Marimuthu). இவர் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு புலிவால் என்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மாரிமுத்துவை ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்தது விட நடிகராக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பதே குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் 1999-ம் ஆண்டு முதல் பலப் படங்களில் நடித்துள்ளார். முதலில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த மாரிமுத்து பிறகு முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். வெள்ளித்திரையில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் மிகப்பெரிய வரவேற்பைப் கொடுத்தது சீரியல்தான்.

அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் என்ற சீரியலின் முதல் பாகத்தில் முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார் மாரிமுத்து. இதில் இவரது கதாப்பாத்திரத்தின் பெயர் குணசேகரன். இவரை மாரிமுத்து என்று சொன்னால் தெரிவதைவிட குணசேகரன் என்று சொன்னால் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். இந்தப் சீரியலில் டப்பிங் பணியில் ஈடுபட்டு இருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தது ரசிகர்களிடையே பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவின் சூப்பர் ஹிட் பாய் காமெடி உருவான விதம்:

இந்த நிலையில் இயக்குநர் சீமான் எழுதி இயக்கிய படம் பாஞ்சாலங்குறிச்சி. இந்தப் படம் கடந்த 1996-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் உதவி இயக்குநராக மாரிமுத்து பணியாற்றி இருந்தார். இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய மாரிமுத்து வடிவேலுவின் ஃபேமஸ் காமெடி குறித்து பேசியுள்ளார்.

Also Read… எட்டு திசையெங்கும் பரவும் பைசன் மீதான அன்பிற்கு நன்றி – மாரி செல்வராஜ்

அதில் பாய் காட்சி ஒன்று உள்ளது. அதில் போதையில் பாயை போட்டு தூங்க வரும் வடிவேலுவிற்கு பாய் சுருண்டு சுருண்டு போகும். இதனால் எவனோ தனக்கு செய்வினை வைத்துவிட்டதாக அந்த காமெடியில் நடித்து இருப்பார் வடிவேலு. இந்தக் காட்சிக்காக சுருளும் பாயைப் தேடி அழைந்ததாகவும் கடைசியில் பாய் ஒன்றை வாங்கி அதில் பாகு காட்சி அதனை சுருட்டி கட்டி வெயிலில் வைத்தப் பிறகு அந்த பாய் அப்படி மாறியதாகவும் மாரிமுத்து அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Also Read… தீபாவளியை முன்னிட்டு தொலைக்காட்சியில் என்னென்ன புது வரவு – லிஸ்ட் இதோ

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை