Kiara Advani: டாக்ஸிக் படத்தில் யாஷுடனான நெருக்கமான காட்சிகளை நீக்க சொன்னேனா? அதிரடி பதிலை கொடுத்த கியாரா அத்வானி!
Kiara Advani Clarification: பாலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் கியாரா அத்வானி. இவர் கன்னடத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியான டாக்ஸிக் படத்தில் யாஷுடன் நடித்துள்ளார். இவர் இப்படத்தில், யாஷுடன் இருக்கும் நெருக்கமான காட்சிகளை நீக்க சொன்னதாக தகவல்கள் பரவிவந்த நிலையில், அதை மறுத்து பதிவை வெளியிட்டுள்ளார்.

கியாரா அத்வானியின் டாக்ஸிக் படம்
இந்தி சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கியாரா அத்வானி (Kiara Advani). இவர் கடந்த 2016ம் ஆண்டில் வெளியான எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் அதிகமாகியிருந்தனர். அந்த வகையில் இவர் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் லீட் கதாநாயகியாக நடித்துவருகிறார். இவர் இறுதியாக கடந்த 2025ம் ஆண்டில் வெளியான கேம் சேஞ்சர் (Game Changer) என்ற படத்தில் நடிகர் ராம் சரணுக்கு (Ram Charan) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு பெரிதாக வரவேற்பை கொடுக்கவில்லை. இப்படத்தின் இறுதியிலே இவர் கர்ப்பமாக இருந்தநிலையில், அவர் பிறகு பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. அந்த வரிசையில் கேம் சேஞ்சர் படத்துடன் இவர் நடித்துவந்த திரைப்படம்தான் டாக்ஸிக் (Toxic).
இதில் கன்னட நடிகர் யாஷுக்கு (Yash) ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தில் அவர் யாஷுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது அப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளிலும் காட்டப்பட்டிருந்தது . அந்த வகையில் அவர் அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கவேண்டும் என சொன்னதாக இணையத்தில் போலியான தகவல்கள் பரவிவந்த நிலையில், அதை கியாரா அத்வானி முழுமையாக மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன சிம்பு – தனுஷ்… வைரலாகும் பதிவு
டாக்ஸிக் படத்தில் நெருக்கமான காட்சியை நீக்க சொன்னது குறித்த போலி தகவலுக்கு கியாரா அத்வானி விளக்கம்:
— Kiara Advani (@advani_kiara) May 4, 2026
நடிகை கியாரா அத்வானி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் கியாரா அத்வானி டாக்ஸிக் படத்தின் அந்தரங்க காட்சியை நீக்க சொன்னதாக குறிப்பிட்டிருந்த நிலையில், அதை பகிர்ந்து, “இது மிகவும் முட்டாள்தனம்” என போலி தகவல்களுக்கும், விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். டாக்ஸிக் படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதிருந்தது. அந்த வகையில் இப்படம் கடந்த 2026 மார்ச் மாதத்திலே வெளியாகவேண்டியிருந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் முடியாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருப்பு படத்தை எந்த வயதில் உள்ளவர்கள் எல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்
அந்த வகையில் இப்படம் வரும் 2026 ஆண்டு ஜூன் 4ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் தற்போது ஜூன் 4ம் தேதியிலிருந்து தள்ளிப்போவதாக யாஷ் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இப்படமானது வரும் 2026 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.