வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்தது யூத் படம்
Youth Movie Entered 3rd Week : தமிழ் சினிமாவில் அதிக அளவில் இளைஞர்களை வைத்து சமீபத்தில் வெளியான படம் யூத். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

யூத் படம்
தமிழ் சினிமாவில் ஸ்கூல் லைஃபை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான படம் தான் யூத். இந்தப் படத்தை கென் கருணாஸ் தான் இயக்கி இருந்தார். இது இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் அவரே நாயகனாக நடித்து இருந்தார். அதன்படி அவர் நாயகனாக நடிக்கும் முதல் படமும் இது என்பதே குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த கென் கருணாஸ் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்களில் தான் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்படி நடித்து கொண்டு இருந்த கென் நாயகனாக நடித்த இந்த யூத் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவு மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை பர்வதா எண்டெர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த நிறுவனம் தயாரித்து உள்ள முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புதிதாக படத்தை தயாரிக்கும் நிறுவனமாக வந்து வெற்றியைப் பெற்றது படக்குழுவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வெற்றிகரமாக 3-வது வாரத்தில் அடியெடுத்து வைத்தது யூத் படம்:
அதன்படி இந்தப் படம் கடந்த 19-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இந்த யூத் படம் தற்போது மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படக்குழு தற்போது தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் சாரின் அந்தப் படம் தான்… மனம் திறந்து பேசிய சாய் அபயங்கர்
யூத் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Youth – BLOCKBUSTER 3rd WEEK 🥳🥁
Thanks for the Overwhelming Love 🤗❤️
# Paarvathaa01 × #KenKarunaas#KenInYouth@KenKarunaas @gvprakash @The_KCR #Devadarshini #SulochanaKumar @paarvathaaent @StreetBoyStudio @gvpkwav @DQsWayfarerFilm @pro_barani pic.twitter.com/Ow4Hdx7xMO
— Paarvathaa Entertainments (@paarvathaaent) April 3, 2026