நானி சார் எழுப்பும் சுவரில் ஒரு செங்கலாக இருக்க விரும்புகிறேன் – கென் கருணாஸ்

Ken Karunas talks about Actor Nani: தமிழ் சினிமாவில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் யூத். இந்தப் படம் தமிழில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது

நானி சார் எழுப்பும் சுவரில் ஒரு செங்கலாக இருக்க விரும்புகிறேன் - கென் கருணாஸ்

கென் கருணாஸ்

Published: 

25 Mar 2026 11:29 AM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் யூத். நடிகர் கென் கருணாஸ் எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் மூலமாக கென் கருணாஸ் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் கென் கருணாஸ். இவர் படத்தை இயக்கி நாயகனாக நடித்தது மட்டும் இன்றி படத்திற்கு பாடல் எழுதி பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியான நான்கு நாட்களிலேயே 28 கோடிகள் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் நடிகர்களும் கென் கருணாஸ் மற்றும் யூத் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மற்ற மொழிகளிலும் வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

நானி சார் எழுப்பும் சுவரில் ஒரு செங்கலாக இருக்க விரும்புகிறேன்:

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நடைப்பெற்ற ஈவெண்டில் நடிகர் கென் கருணாஸ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி கென் கருணாஸ் பேசியதாவது, நான் நடிகர் நானியின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை நான் பெரிதும் போற்றுகிறேன். மேலும் நானி சார் ஒரு மிகப்பெரிய சுவரை எழுப்பி வருகிறார். அந்த சுவரில் நான் ஒரு செங்கலாக இருக்க விரும்புகிறேன் என்று நடிகர் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் இதுதான்… போஸ்டர் வெளியிட்ட படக்குழு

இணையத்தில் வைரலாகும் கென் கருணாஸ் பேச்சு:

Also Read… யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஸ்வநாத் & சன்ஸ் பட டீசர்

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்