நான் என் படத்திற்கு யூத் பெயர் வைக்க இதுதான் காரணம் – கென் கருணாஸ் விளக்கம்

Ken Karunas explained about Youth Movie Title: தமிழ் சினிமாவில் அடுத்த இளம் தலைமுறை இயக்குநராக உருவாகி உள்ளவர் கென் கருணாஸ். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள யூத் படத்திற்கு அந்த பெயர் வைக்க என்ன காரணம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நான் என் படத்திற்கு யூத் பெயர் வைக்க இதுதான் காரணம் - கென் கருணாஸ் விளக்கம்

யூத் படம்

Published: 

10 Mar 2026 12:12 PM

 IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம ஆகி தற்போது படங்களில் முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் கருணாஸ். இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன காலத்தில் தொடர்ந்து பலப் காமெடி கதாப்பாதிரங்களை ஏற்று நடித்து வந்தார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பது மட்டும் இன்றி தமிழக அரசியலில் அரசியல் தலைவராகவும் வலம் வருகிறார். தனியாக கட்சியை நடத்தி வந்தாலும் தமிழகத்தில் உள்ள பெரிய கட்சியினரிடம் கூட்டணி வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது குடும்பத்தில் இருந்து இரண்டாவது தலைமுறையாக சினிமாவில் தற்போது வலம் வருகிறார் கென் கருணாஸ். இவர் படங்களில் தொடர்ந்து முக்கிய வேடத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது சினிமாவில் புதிய அவதாரங்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி கென் கருணாஸ் எழுதி, இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் யூத். இந்தப் படத்தில் பாடல் எழுதி அதனை பாடவும் செய்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார் கென் கருணாஸ். அதன்படி அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

அப்பாவின் அரசியல் எதிரியின் படத்தின் பெயரை ஏன் வைத்த என்று அம்மா கேட்டாங்க:

அதன்படி கென் கருணாஸ் பேட்டியில் கூறியதாவது, என் அம்மா கேட்டார், “உங்க அப்பா விஜய் சார்க்கு அரசியல் ரீதியாக எதிர்மாறானவர்… ஆனா உங்க பட்டப்பெயர் ‘யூத்’. ஏன்?” நான் அவங்ககிட்ட சொன்னேன், அவருடைய நிலைப்பாடும் அரசியல் நடவடிக்கைகளும் வேறு, என் சினிமாவும் என் கேரியரும் வேறு. இந்தப் பட்டம் எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியம் என்றும் கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஏப்ரலில் கருப்பு படத்தின் ரிலீஸ் இல்லையா? இணையத்தில் வைரலாகும் புது தேதி…

இணையத்தில் வைரலாகும் கென் கருணாஸ் பேச்சு:

Also Read… பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தெறிக்கவிடும் தாய் கிழவி படம் – வைரலாகும் தகவல்

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..