இந்த புகைப்படத்தில் இருக்கு சிறுவன் யார் தெரியுமா? சீரியல் மூலம் சினிமாவில் நுழைந்த நடிகர்!

Tamil Actor Childhood Photo : தமிழ் மற்றும் தென்னிந்திய நடிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த விதத்தில் கீழே இருக்கும் போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் என தெரியுமா?. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இந்த புகைப்படத்தில் இருக்கு சிறுவன் யார் தெரியுமா? சீரியல் மூலம் சினிமாவில் நுழைந்த நடிகர்!

தமிழ் நடிகரின் சிறுவயது புகைப்படம்

Published: 

21 Apr 2026 08:36 AM

 IST

சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களின் அவ்வப்போது நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்கள் வைரலாகிவரும். இதில் அந்த அடையாளம் தெரியாத குழந்தை யார் என கண்டுபிடிப்பதே ஒரு போராட்டம். அந்த வகையில் மேலே இருக்கும் போட்டோவில் இருக்கும் பள்ளி சிறுவன் யாருனு தெரியுதா?. இவர் ஆரம்பத்தில் சீரியலில் இளம் நடிகராக நுழைந்தவர் (Serial Actor). தனது சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு இருந்தவர். இவருக்கும் இவரின் குடும்பத்திற்கும் எந்தவித சினிமா மற்றும் சின்னத்திரை பின்னணியும் இல்லை. அந்த வகையில் தனது திறமையின் மூலம் சீரியலில் நடிகராக நுழைந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) சீரியல் நடிகர் மற்றும் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) பிறகு சின்னத்திரையிலிருந்து சினிமா சென்ற நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழில் கனா காணும் காலங்கள் (Kana Kaanum Kaalangal), சரவணன் மீனாட்சி (Saravanan Meenatchi 2) போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடங்களில் படங்களில் நடித்திருக்கிறார். அந்த விதத்தில் இவர் லீட் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிவா அரவிந்த். இதையடுத்து அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் பிக்பாஸிலும் பங்குபெற்றுள்ளார். தற்போது நயன்தாராவிற்கு ஜோடியாக படத்தில் நடித்துள்ளார். இந்த சிறுவன் வேறுயாருமில்லை நடிகர் கவின் ராஜ்தான்.

இதையும் படிங்க: பெல்ஜியம் கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்த அஜித்தின் அணி.. கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் கவினின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகர் கவின் சினிமாவில் கடந்துவந்த பாதை :

நடிகர் கவின் தனது ஆரம்பகாலத்தில் சீரியலில் நடிகராக நடித்துவந்தார். விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை வெளியான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்துவந்தார். இதையடுத்து தாயுமானவன் என்ற சீரியலில் நடித்துவந்தார். அந்த வகையில் இவருக்கு ஒரு நடிகராக அங்கீகாரம் கொடுத்த சீரியல் சரவணன் மீனாட்சி சீசன் 2. இந்த சீரியலில் ரட்சிதா மகாலெட்சுமிக்கு ஜோடியாக, வேட்டையன் என்ற வேடத்தில் நடித்து பிரபலமானார். சீரியலில் நடிக்கும்போதே சினிமாவிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார்.

இதையும் படிங்க: தாய் கிழவி படம் போன்ற படத்தை பார்க்க ஆசையா? அப்போது இந்த தண்டட்டி படத்தை மிஸ் பண்ணிராதீங்க!

விஜய் சேதுபதியின் பீசா, விஷ்ணு விஷாலின் இந்து நேற்று நிலை போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் 2017ம் ஆண்டில் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் லீட் நாயகனாக உருவெடுத்தார். இதையடுத்து லிப்ட், டாடா, ஸ்டார், கிஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த வகையில் இவர் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவனின் இயக்கத்தில் ஹாய் என்ற படத்தில் நயன்தாராவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பிரியங்கா மோகனுக்கு ஜோடியாகவும் புது படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
ஜன நாயகன் பட கசிவால் விஜய் மற்றொரு படத்தில் நடிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்
அப்பா – மகன் இடையே இருக்கும் ஈகோ… இறுதியில் வென்றது யார்? மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள ஆஷகள் ஆயிரம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Mari Selvaraj: தனுஷுடனான படத்தின் நிலை என்ன? ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ்!
மீண்டும் பள்ளிக்கு போகலாம்… 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரபல மலையாள நடிகர்!
லோகேஷ் கனகராஜின் ’29 தி பிலிம்’ ரிலீஸ் தேதி எப்போது? நகைச்சுவையுடன் கூடிய அறிவிப்பு வீடியோ இதோ!
அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு – வைரலாகும் அப்டேட்
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..