Karthi : எங்க அத்தையைப் படிக்கவைக்க முடியவில்லை.. மேடையில் கண்ணீர் மல்கப் பேசிய கார்த்தி!

Karthis Heartfelt Speech : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. இவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கோவை மாவட்டம், சூலூர் அரசு ஆண்கள் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்தி, தனது அத்தையின் படிப்பு பற்றி கண்ணீருடன் பேசியுள்ளார்.

Karthi : எங்க அத்தையைப் படிக்கவைக்க முடியவில்லை.. மேடையில் கண்ணீர் மல்கப் பேசிய கார்த்தி!

கார்த்தி

Published: 

15 Jun 2025 15:05 PM

 IST

நடிகர் கார்த்தி (Karthi)  கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் மெய்யழகன் (Meiyazhagan). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியானது. இந்த படத்தில் கார்த்தியுடன் நடிகர் அரவிந்த் சுவாமியும் (Arvind Swamy ) இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் கைவசத்தில் வா வாத்தியார் (Vaa Vaaththiyaar), ஹிட் 4 (Hit 4) மற்றும் சர்தார் 2  (Sardar 2) என அடுத்தடுத்த படங்கள் இருக்கிறது. படங்களில் நடிப்பதையும் தொடர்ந்து கார்த்தி, பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் கோவை மாவட்டம் (Coimbatore District),  சூலூரில்  (Sulur) உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது தந்தை சிவகுமாருடன் இணைந்து கலந்துகொண்டார்.

இந்த பள்ளியில்தான் நடிகர் சிவகுமார் படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கண்ணீர் மல்கப் பேசியுள்ளார். தனது அத்தையின் படிப்பு பற்றி மேடையில் கண்ணீருடன் நடிகர் கார்த்தி பேசியுள்ளார். மேலும் கார்த்தி பேசியது பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

மேடையில் கண்ணீர் மல்கப் பேசிய கார்த்தி :

கோவை மாவட்டம், சூலூரில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி மற்றும் அவரின் தந்தையும், நடிகருமான சிவகுமார் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். தனது தந்தை படித்த பள்ளியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கார்த்தி, மேடையில் பேசத் தொடங்கினார். அப்போது அவர் தனது அத்தை கல்விக் கட்டணம் செலுத்தமுடியாமல் கஷ்டப்பட்டதை பற்றி நினைவு கூர்ந்தார்.

மேலும் பேசிய கார்த்தி அந்த பள்ளிக்கு சுமார் ரூ 5 லட்சத்தை நன்கொடையாகக் கொடுப்பதாகவும் அறிவித்திருந்தார் . அப்போது நடிகர் சிவகுமார் தனது மகன் கார்த்தியின் செயலை கண்டு நெகிழ்ச்சியடைந்து, அவரை மேடையில் சமாதானம் செய்தார். இந்த சம்பவமானது அங்குள்ள அனைவரையுமே உருகவைத்தாக அமைந்தது.

நடிகர் கார்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு :

கார்த்தியின் புதிய படங்கள் :

மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் தமிழில் பிரம்மாண்டமாக உருவாகிவந்த படங்கள் வா வாத்தியார் மற்றும் சர்தார் 2. இதில் இயக்குநர் நலன் குமராசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வா வாத்தியார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறது. மேலும் இயக்குநர் பிஎஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் சர்தார் 2 படமும் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்து ரிலீசிற்கு தயாராகிவருகிறது.

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை