karthi: தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் கார்த்தி.. சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா?

Karthi Telugu Movie Update: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடந்து தயாராகிவரும் நிலையில், தெலுங்கிலும் நடிக்கவுள்ளார். இவர் தெலுங்கில் உச்ச நடிகருடன் இணைந்து படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது யார் என்பது பற்றி பார்க்கலாம்.

karthi: தெலுங்கில் முன்னணி நடிகருடன் இணையும் கார்த்தி.. சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா?

கார்த்தி

Published: 

27 Oct 2025 21:38 PM

 IST

நடிகர் கார்த்தியின் (karthi) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் வா வாத்தியார் (Vaa Vaathiyaar) என்ற படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy) இயக்க, கார்த்தி அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி (Kirthi Shetty) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது ஒரு மசாலா படமாக தயாராகிவருவதாக, இப்படத்தின் இயக்குநரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் சர்தார் 2 (Sardar 2) என்ற படமும் தயாராகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கார்த்தி, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகிவரும் மார்ஷல் (Marshal) படத்தில் பிஸியாக இருந்துவருகிறார். மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரின் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜே சித்துவின் ‘டயங்கரம்’ படம்.. பூஜைகளுடன் ஷூட்டிங் இன்று தொடக்கம்!

தெலுங்கு முன்னணி நடிகருடன் இணையும் கார்த்தி :

நடிகர் கார்த்தி தமிழில் படங்களில் நடிப்பதை தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின் முன்னணி நடிப்பில் உருவவாகும் படத்தில் நடிகர் கார்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் பாபி கொல்லி இயக்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மகாராஜா படத்தில் நடிக்க தேர்வானது இப்படிதான் – நடிகர் நட்டி நடராஜன் ஓபன் டாக்

இப்படத்தில் சிரஞ்சீவி முன்னணி வேடத்தில் நடிக்கும் நிலையில் கார்த்தி அவருக்கு இணையான வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் சிரஞ்சீவியின்158-வது படமாக உருவாகலாம் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகும் நிலையில், 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு கார்த்தியின் சம்பளம் :

கார்த்தி மற்றும் சிரஞ்சீவியின் இப்பபடத்தை ஜன நாயகன் படத்தை தயாரித்த கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் தமன் எஸ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளாராம். இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் கார்த்திக்கு மட்டும் சுமார் ரூ 23 கோடிகள் சம்பளம் வழங்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.