தனுஷின் கர படத்தின் ப்ரீ ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Actor Dhanush Kara Movie Pre-Release Event Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி எப்போது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

தனுஷின் கர படத்தின் ப்ரீ ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

கர

Published: 

15 Apr 2026 19:36 PM

 IST

தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் தன்ஷ். இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார். நடிப்பதில் மட்டும் இன்றி இவர் காலடி வைத்த அனைத்து துறைகளிலும் தனுஷ் சிறந்து விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறைவான அளவில் இவர் படங்களை இயக்கி இருந்தாலும் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான இட்லி கடை படத்தில் அவரே எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதன்படி தனது 54-வது படமான கர படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது தனுஷ் 55-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தனுஷ் 56-வது படத்திற்காக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் கர படத்தின் ப்ரீ ரிலீஸ் எப்போது?

இந்த 2026-ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கர. இந்தப் படம் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் ப்ரீ ரிலீஸ் வருகின்ற 19-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!

தனுஷின் கர படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Dhanush: எனது முதல் இந்தி படத்தில் பட்ட கஷ்டம் – நடிகர் தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி