காந்தாரா படக்குழுவிற்கு மேலும் ஒரு இழப்பு… நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Kantara: Chapter 1 Movie: இயக்குநர் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கிய காந்தாரா சாப்டர் 1 படத்தில் நடித்த நடிகர்கள் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தப் படதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்த நடிகர் ஒருவர் மாரடைப்பாள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்தாரா படக்குழுவிற்கு மேலும் ஒரு இழப்பு... நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு!

உயிரிழந்த விஜூ

Published: 

12 Jun 2025 15:55 PM

 IST

இயக்குநர் ரிஷப் ஷெட்டி (Rishab Shetty) இயக்கி நாயகனாக நடித்தப் படம் காந்தாரா. இந்தப் படம் கன்னட மொழியில் வெளியாகி இருந்தாலும் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கன்னட சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திய பங்கு இந்தப் படத்திற்கு நிச்சயம் உண்டு என்று சினிமா துறையினர் கூறுவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே இந்தப் படக்குழுவினருக்கு தொடர்ந்து இழப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தப் பாகமாக தற்போது உருவாகி வரும் காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பு நடைப்பெற்று வந்த நிலையில் கடந்த மே மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு படத்தில் நடித்து வந்த ஜூனியர் நடிகர் கபில் என்பவர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதனைத் தொடர்ந்து அடுத்த வாரமே மற்றொரு இழப்பு ஏற்பட்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆம் மே மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு காந்தாரா படத்தில் நடித்த நடிகர் ராகேஷ் பூஜாரி என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காந்தாரா படக்குழுவிற்கு மேலும் ஒரு இழப்பு:

இப்படி தொடர்ந்து இரண்டு இழப்புகள் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலையில் தற்போது படக்குழுவில் இருந்து மூன்றாவதாக ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கேரளாவைச் சேர்ந்த விஜு விகே என்பவர் கர்நாடகாவில் நடைபெறும் காந்தாரா படத்தின் படப்பிடிப்பில் நடித்து வந்தார்.

இந்தப் படப்பிடிப்பில் நடிப்பதறகா கர்நாடகாவில் உள்ள ஒரு ஹோம் ஸ்டேயில் தங்கி தொடர்ந்து படப்பிடிப்பிற்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜுவிற்கு நேற்று 11-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு இரவு திடீரென நெஞ்ச் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து விஜுவின் குடும்பத்தினர் வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்டும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தாரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Related Stories
2025ல் டிரென்டிங்.. இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படத்தின் ட்ரெய்லர் எது தெரியுமா? முழு விவரங்கள் இதோ!
Jana Nayagan: லியோவை முந்திய ஜன நாயகன்.. டிக்கெட் முன்பதிவில் சாதனை.. வைரலாகும் பதிவு!
Suriya47: சிங்கம் இஸ் பேக்.. போலீஸ் அதிகாரி வேடத்தில் சூர்யா. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!
Kombuseevi: சரத்குமார் – சண்முக பாண்டியனின் அதிரடி கதையில்… கொம்புசீவி படம் எப்படி இருக்கு.. விமர்சனங்கள் இதோ!
கூட்டத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்… விசாரணையில் இறங்கிய போலீஸ்!
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்