Kamal Haasan: ரோபோ சங்கர் மறைவு… நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்!

Kamal Haasan Paid Tribute To Robo Shankar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவர் தனது ரசிகரும், மறைந்த நகைச்சுவை நடிகருமான ரோபோ சங்கரின் உடலை நேரில் காண வந்துள்ளார். கனத்த இதயத்துடன் சோகத்தில் கமல்ஹாசன் வந்த காட்சி, குடும்பத்தினரையும் மற்றும் ரசிகர்களையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

Kamal Haasan: ரோபோ சங்கர் மறைவு... நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்!

ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று கமல்ஹாசன் அஞ்சலி

Published: 

19 Sep 2025 16:10 PM

 IST

தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரோபோ சங்கர் (Robo Shankar). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து, தனுஷ் (Dhanush) முதல் தளபதி விஜய் (Thalapath Vijay) வரை பல்வேறு பிரபலங்களின் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2025ம் செப்டம்பர் 16ம் தேதி உடல்நிலைக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று 2025 செப்டம்பர் 18 ஆம் தேதி இரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தியானது திரையுலகினரையும் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் கமல்ஹாசன் (Kamal Haasan) தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலை தெரிவித்திருந்தார். தொடர்ந்து இன்று 2025 செப்டம்பர் 19 ஆம் தேதியில் சென்னையில் உள்ள ரோபோ சங்கரின் இல்லத்திற்கு சென்று, அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் ரோபோ சங்கரின் மகளுக்கு ஆறுதல் சொல்லி அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க : உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன் – ரோபோ சங்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கமல் ஹாசன்

ரோபோ சங்கர் மறைவு குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவு

ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்

நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை சரியிலலாமல் கடந்த 2025 செப்டம்பர் 18ம் தேதியில் இரவு 9:05 மணியளவில் மரணமடைந்தார். இவரின் இறப்பு செய்தி கேட்டு திரையுலகினர் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இவரின் உடலுக்கு  நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன், சூரி, சிவகார்த்திகேயன், இளவரசு மற்றும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதையும் படிங்க : காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன்.. விஜய் ஆண்டனி ஓபன் டாக்!

மேலும் நடிகர் சூரி, நடிகர் ரோபோ சங்கரின் உடலை பார்த்த கதறிய அழுத்த காட்சி அங்குள்ள அனைவரையும் மேலும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அங்கு வந்த பிரபலங்களை அனைவரும் , ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மற்றும் அவரின் மனைவி பிரியங்கா சங்கருக்கும் ஆறுதல் கூறியிருந்தனர்.

ரோபோ சங்கரின் மறைவிற்கு  வருத்தம் தெரிவித்த விஜய் :

நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய், நடிகர் ரோபோ சங்கரின் மறைவிற்கு தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும், ரோபோ சங்கரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தார். மேலும் நடிகர் கார்த்தி, விஷால், சிலம்பரசன் போன்ற நடிகர்களும் தங்களின் இரங்கலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.