உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன் – ரோபோ சங்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கமல் ஹாசன்

Actor Robo Shankar: சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றவர் ரோபோ சங்கர். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் காமெடி நடிகராக வலம் வந்த இவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன் - ரோபோ சங்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கமல் ஹாசன்

ரோபோ சங்கர், கமல் ஹாசன்

Published: 

18 Sep 2025 22:42 PM

 IST

கிராமங்களில் நடைபெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ரோபோவை போல நடனம் ஆடுவதற்கு உடல் முழுவதும் சில்வர் கலர் பெயிண்டை அடித்துக்கொண்டு ரோபோ போல நடனம் ஆடி மக்களிடையே பிரபலம் ஆனவர் ரோபோ சங்கர் (Robo Shankar). இவரது இயற் பெயர் சங்கர். ரோபோ வேஷம் போட்டு நடனம் ஆடுவதால் இவர் ரோபோ சங்கர் என்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். திருவிழாக்களிலும், குடும்ப விழாக்களிலும் தொடர்ந்து இந்த மாதிரியான காமெடி நிகழ்ச்சிகளை செய்துவந்த நடிகர் ரோபோ சங்கர் பின்பு சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் 2012-ம் ஆண்டு போட்டியாளராக பங்கேற்ற இவர் அதனைத் தொடர்ந்து கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் அளவிற்கு சினிமா துறையில் வளர்ச்சியைப் பெற்றார்.

தொடர்ந்து சின்னத்திரையில் மட்டும் இன்றி வெள்ளித்திரையிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிகர் ரோபோ சங்கர் நடிக்கத் தொடங்கினார். கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை வெள்ளித்திரையில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்த ரோபோ சங்கர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இவருக்கான அடையாளத்தை சினிமாவில் பெற்றார். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரவி மோகன், ஜீவா, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், தனுஷ், ஆர்யா, ஜிவி பிரகாஷ் குமார், விஜய், விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், விஷால், அஜித், விக்ரம், ஆர்.ஜே.பாலாஜி என பலருடன் இணைந்து நடிகர் ரோபோ சங்கர் நடித்துள்ளார்.

ரோபோ சங்கர் மறைவிற்கு உருக்கமான பதிவை வெளியிட்ட கமல் ஹாசன்:

தொடர்ந்து சினிமவில் முன்னணி காமெடி நடிகராக இருந்த ரோபோ சங்கர் தன்னை எப்போது ஒரு கமல் ஹாசனின் தீவிர ரசிகனாகவே வெளிப்படுத்தி வந்தார். அவர் வீட்டில் என்ன விசேசம் நடந்தாலும் முதலில் கமல் ஹாசனுக்குதான் அழைப்பு செல்லும். அந்த அளவிற்கு அவர் மீது ரோபோ சங்கர் பிரியமாக இருந்தார்.

இந்த நிலையில் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். இந்த செய்து அவரது குடும்பத்தையு, நண்பர்களையும் மற்றும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் ரோபோ சங்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also read… நிலவையே கொடுப்பதாக சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகமட்டேன் – பிரபல நடிகை ஓபன் டாக்

கமல் ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also read… அதர்வாவின் தணல் படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்த விமர்சனம் – என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?